பசி பரிதாபம்!



நாக்பூரிலுள்ள டடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் பாட்டிலில் தலை நுழைத்து சிக்கிக்கொண்ட ஓநாயை விலங்குநல ஆர்வலர்கள்  காப்பாற்றியுள்ளனர். உணவுதேடி காப்பகப் பகுதியில் ஓநாய்க்கூட்டம் சுற்றி வந்தது. அதிலிருந்த ஓநாய் ஒன்று உணவுக்காக பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் தலையை  விட்டு வெளியேற முடியாமல் தடுமாறியது.
தகவல் கிடைத்த தனாய் பன்பாலியா குழுவினர் 3 மணிநேரம் போராடி பிளாஸ்டிக் பாட்டிலிலிருந்து ஓநாயின்  தலையை விடுவித்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர். ‘‘உணவின்றி தவித்த ஓநாய் மிகவும் பலவீனமாக இருந்தது. கண்டெய்னரில் துளைகள் இருந்ததால்  ஓநாயைக் காப்பாற்ற முடிந்தது...’’ என்கிறார் பன்பாலியா.காயங்களுக்கான சிகிச்சைக்குப் பிறகு ஓநாய் திரும்ப வனத்திற்குத் திரும்பிவிட்டது.

-ரோனி