ஆர்டிஐ சட்டத்துக்கு ஜிஎஸ்டி!



மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் ஆர்வலர், தகவலறியும் உரிமைச்சட்டத்தில் கேட்ட தகவலுக்கு ஜிஎஸ்டி வரி கட்டச்சொல்லி அதிர்ச்சி அளித்துள்ளது மாநில அரசின் வீட்டு வசதி வாரியம். அம்மாநிலத்தைச் சேர்ந்த ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டாளரான அஜய் துபே, ரியல் எஸ்டேட் வாரியத்தின் அலுவலக புதுப்பிப்பு செலவு விவரங்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக் கேட்டிருந்தார்.

அதற்கு அரசு, ஜிஎஸ்டி வரியும் கட்டி வாங்கிக் கொள்ளுங்கள் என ஆவணங்களை வழங்கியுள்ளது. 18 பக்க போட்டோ நகல்களுக்கு ரூ.36, மத்திய, மாநில ஜிஎஸ்டி வரிகள் ரூ.7 சேர்த்து ரூ.43 கட்டி ஆவணங்களைப் பெற்றுள்ளார் அஜய் துபே. “ஆர்டிஐ சட்டப்படி தகவல் கேட்பதற்கு ஜிஎஸ்டி வரியா? இதற்கு எதிராக போராடப்போகிறேன்...” என்கிறார் அஜய் துபே.  
         

ரோனி