அடி வாங்கிய த்ரிஷா!பாராட்டுவார்கள் என்று நினைத்துத்தான் டால்ஃபினுடன், தான் கொஞ்சிக் குலாவும் படங்களை த்ரிஷா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால், பிடித்தது சனி. ரசிகர்கள் பேயாட்டம் ஆடித் தீர்த்துவிட்டார்கள்.‘டால்ஃபின் ஒருவகையான மீன் இனம்.

அதை எப்படி நீச்சல் குளத்தில் நீந்த விடலாம்..? உங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் குளிக்கும்போது உயிரினங்களை வதைப்பீர்களா..?’ என்பதை நாகரீகமாகவும் கொஞ்சம் வரம்பு கடந்தும் எழுதித் தள்ளிவிட்டார்கள். குணமா வாய்ல சொல்லணும்... இப்படி அடிச்சா... குழந்தை தாங்குமா?!                                  
- கே.என். எஸ்