ஸ்ருதி ஹாசன் ஏன் நடிப்பதில்லை..?இதுதான் கோலிவுட் / டோலிவுட்டில் டாக். தமிழில் ‘சிங்கம் 3’; தெலுங்கில் பவன் கல்யாணுடன் ‘வீரம்’ ரீமேக்கான ‘காட்டமராயுடு’. இவ்விரு படங்களுமே 2017ல் வெளியானவை. கல்லா கட்டியவை. இரண்டிலும் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். ஆனால், இதன் பிறகு அவர் நடிப்பில் எந்தப் படமும் எந்த மொழியிலும் வெளியாகவில்லை. ஏன்..?

டாப் மோஸ்ட் ஹீரோயினாக வலம் வரும்போதே எதற்காக சட்டென்று தற்காலிகமாக நடிப்பதை நிறுத்தியிருக்கிறார்..? இசை நிகழ்ச்சிகளை சர்வதேச அளவில் நடத்தத்தான்! ஆம். மைக்கேல் ஜாக்சன் போல் இன்டர்நேஷனல் லெவலில் புகழ்பெற ஸ்ருதி நினைக்கிறார். அதற்கான பயிற்சியில்தான் இப்போது இருக்கிறார்! ரைட்டு. உலகநாயகன் மகள் உலக நாயகி ஆகிறார்!

- கே.என். எஸ்