லவ்வர்ஸ் ஃபேஷன்!



ஒரே கலரில் உடை அல்லது ஒரே கலரில் டி-ஷர்ட்; அதுவும் இல்லையெனில் ஜாலி ஸ்டைல் ஜோடி டி-ஷர்ட்ஸ்... என காதல் ஜோடிகளை கலகலப்பாக்க ஏகப்பட்ட வெரைட்டிகள்
வந்தாலும் நம் இந்திய கலாசாரத்திற்கு ஏற்ப ஒரு டிசைனும் இல்லையே...?

தவிர ஒரே கலரில் வேண்டுமானால் புடவை, குர்தா அல்லது ஷர்ட் என அணியலாம். இதிலென்ன ஸ்பெஷல்...?

இப்படிக் கேட்டு நொந்துகொள்ளும் ஜோடியா நீங்கள்! உங்களுக்காகவே இயங்குகிறது Dheu ஆன்லைன் தளம்.

‘‘வெஸ்டர்ன் உடைகள்ல கபுள்செட்  டிசைன் செய்றது சுலபம். காரணம், அவங்க ஸ்கின் டோனுக்கு காட்டன் பீச் வேர்ஸ் அல்லது கலர்ஃபுல் ஜியார்ஜெட் செட்டாகும். நம் பெண்களுக்கு என்ன உடை வேண்டுமானாலும் போடலாம். ஆனா, ஆண்களுக்கு உடைகள் உருவாக்கறப்ப பக்காவா டிசைன் செய்யணும்...’’ என உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் Dheu தளத்தின் உரிமையாளரும் டிசைனருமான கார்கி பால்.

‘‘முக்கியமா கொஞ்சம் தாடி, மீசை, கோதுமை நிறம் அல்லது டஸ்க்கி டோன் ஆண்கள் மேல குறிப்பிட்ட சில கலர்ஸை பயன்படுத்த முடியாது. தவிர இந்தியாவுல எல்லா இடங்கள்லயும் டி-ஷார்ட் அல்லது பீச்வேர்ஸை அணிந்து செல்ல முடியாது!திருமணம், வீட்ல விசேஷம், சீமந்தம், சடங்கு, பூஜை மாதிரியான விழாக்களுக்குனே சில வரையறைகள் உடை விஷயத்துல இருக்கு.

இதையெல்லாம் மனசுல வைச்சுதான் டிரெடிஷனல் கபுள் செட்களை டிசைன் செஞ்சேன். இந்தியர்களுக்கு பிடிச்ச சில்க், காட்டன், ரேயான் காட்டன், கைத்தறி காட்டன்லதான் இந்த உடைகளை உருவாக்கியிருக்கோம். வெப்பமான காலநிலைக்கும் இந்த மெட்டீரியல்ஸ் பொருத்தமாக இருக்கும்...’’ என்ற பால் தொடர்ந்து உடைகளின் டிசைன்ஸ் குறித்தும் எப்படி அணியலாம் என்றும் விளக்கினார்.

‘‘நீல நிற பனாரஸ் சில்க் புடவை, குர்தா ஷெர்வானி ஸ்டைல்ல அதே பனாரஸ் சில்க்குல டிசைன் செய்திருக்கோம். இதுல பெண்ணின் உடல் முழுக்க உள்ள பூ டிசைன் போல ஆணுக்கும் கொடுத்தா அவங்களோட மேன்லினெஸ் காணாமப் போயிடும்!

ஸோ, புடவைல இருக்கற நீலம்... அதுல கோல்டன் சிம்பிள் வொர்க் செய்திருக்கோம். கல்யாணம், பண்டிகை காலங்களுக்கான டிசைன் இது. இதே பாணில கோல்டன் மற்றும் கருப்பு காம்போல இருக்கும் கைத்தறி பனாரஸ் சில்க்... கருப்பு விரும்பிகளுக்கு ஸ்பெஷல் லுக் கொடுக்கும். மேலும் தோத்தி குர்தா & கருப்பு நிற சில்க் புடவை கிராண்டா ராயல் கபுள் லுக் கொடுக்கும்.

சிம்பிள் டெலிகேட் லுக்தான் எங்க ஸ்டைல்னு சொல்றவங்க பிங்க் நிற ஃபேமிலி கலெக்‌ஷனுக்கு போகலாம். ப்ளைன் பிங்க் வெள்ளை நிற செட்டும், ஹேண்ட்லூம் காட்டனும் வெயிலுக்கு ஏற்ற உடை. தினமும் பயன்படுத்தும் கேஷுவல் உடையாகவும் இதை அணியலாம். அல்லது ஆரஞ்சு - நீல நிற செட்டுக்கு போகலாம். குர்தாவுடன் ஆரஞ்சு நிற தோத்தி இதுல வரும். லக்னோ தெருவோர கலெக்‌ஷன்ஸை பார்த்து இன்ஸ்ைபயராகி இதை உருவாக்கி இருக்கோம்.

தோத்தி வேண்டாம்னா வெள்ளை நிற பேன்ட் அல்லது ஷெர்வானி பாட்டம்களை பயன்படுத்தலாம். இன்னொரு வெள்ளை - ஆரஞ்சு செட் மைனர் ஸ்டைல்! இது சமீபத்திய வரவு. சில்க் புடவைகளுக்கு தங்க நகைகள் அல்லது மேட் நகைகள் பயன்படுத்லாம்.

டெலிகேட் பிங்க் மாதிரி காட்டன் புடவைகளுக்கு ஆக்ஸிடைஸ்ட் நகைகள் அல்லது பீட்ஸ் போன்ற ஆக்ஸசரிஸ்களைப் பயன்படுத்தலாம். குர்தா, ஷெர்வானிகளுக்கு ஆண்கள் ஜோத்பூரி ஷூக்கள் அல்லது செருப்புகள் பயன்படுத்தலாம். அல்லது பண்ணையார்கள் ஸ்பெஷல் லெதர் செருப்புகள் அணியலாம்!’’ என்கிறார் கார்கி பால்.

பிறகென்ன... இந்த வேலன்டைன்ஸ் டே-வை கலர்ஃபுல்லாக செலிபிரேட் செய்யுங்க!   

மாடல்கள்: தீபாரன் ஸ்வராஜ், ரியா தத்தா, ஸ்ரேயாஷி ஷா
ஸ்டைலிங்: மதாப்
உடைகள்:  கார்கி பால் (www.dheu.in)


ஷாலினி நியூட்டன்

லௌகிக் தாஸ்