அஜித் ப்ளே ஸ்டோர்!



கைவசமிருப்பது: நோக்கியா பேஸிக் மாடல். காஸ்ட்லி போன்? ‘அதற்கான அவசியம் வரவில்லை. பேசுவதற்கு மட்டுமே போன்..’ என்கிறார்!

ரிங்டோன்: நோக்கியா டோன்.

பிரௌஸிங்: டெஸ்க்டாப் சிஸ்டம் என்றால் பிரௌஸிங்கில் இஷ்டம் அதிகம்.

ஷாப்பிங்: கேமரா அண்ட் கேமரா அக்சஸரீஸ் நிச்சயம் இடம்பெறும்.

நீண்ட காலமாக கடைப்பிடிக்கும் வழக்கம்: மாலை 6 மணிக்கு மேல் ஃபேமிலி டைம்.

குட் ஹேபிட்: யாருக்காவது போன் செய்ய விரும்பினால்... ‘உங்களுக்கு கால் பண்ணலாமா? எப்போ பேசலாம்?’ என மெசேஜ் அனுப்புவார். அவர்கள் சொன்னபிறகே பேசுவார்.

மெயின் ஹாபி: பயோகிராஃபி புத்தகங்கள் வாசிக்க பிடிக்கும். நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையை அடிக்கடி விரும்பி வாசிப்பதுண்டு.

பிடித்த உணவு: மெக்ஸிகன் ஃபுட்ஸ். அதை சமைப்பதிலும் கெட்டிக்காரர்.

கார்ஸ்: சிம்பிளான ஸ்விஃப்ட் தவிர, ஹோண்டா அக்கார்ட் வி.6, பி.எம்.டபுள்யூ.7 சீரீஸும் உண்டு.

பிடித்த ஸ்பாட்: லண்டன். அங்கே எல்லா வீடுகளும் ஒரே மாதிரி டிசிப்ளின் ஆக இருப்பதால் பிடிக்குமாம்!

ஆல் டைம் மெசேஜ்: வாழு... வாழவிடு!

மை.பா