கருச்சிதைவை அதிகரிக்கும் காற்று மாசுபாடு!



காற்று மாசுபாடு குறித்து பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடந்துவருகின்றன. அதில் இது லேட்டஸ்ட்.
‘‘காற்று மாசுபாடு கருச்சிதைவை 50 சதவீதம் அதிகரிக்கக்கூடும்...’’ என்று சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியளிக்கின்றனர். 2009 முதல் 2017 வரை சீன தலைநகரில் வசிக்கும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றனர்.

எரிபொருட்களால் உருவாகும் நச்சு இரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘‘கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களின் சொந்த ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, கருவின் ஆரோக்கியத்துக்கும் அவசியமாகிறது...’’ என்கிறார் பேராசிரியர் ஜாங்.

த.சக்திவேல்