பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!



நம் இளசுகளின் மத்தியில் கேப்பச்சினோ காபிக்குத் தனி மவுசு. கோப்பையை மீறி நுரை ததும்பும் கேப்பச்சினோவை வட நாட்டு சமையல் பாரம்பரியத்துடன் கலந்து சூப் வடிவில் தருகிறது சண்டிகரில் உள்ள ஓர் உணவகம்! அந்த சூப்பின் பெயர் தால் மக்கானி கேப்பச்சினோ.அறிமுகமான சில நாட்களிலேயே பலரின் ஃபேவரிட் ரெசிபியில் இடம்பிடித்துவிட்டது.

ஹைதராபாத் பிரியாணி, மதுரை ஜிகர்தண்டா போல் வருங்காலத்தில் சண்டிகர்தால் மக்கானி கேப்பச்சினோவும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று இதைச் சுவைத்தவர்கள் சர்டிபிகேட் தருகிறார்கள்.

‘‘என் இதயத்துக்கு நெருக்கமான ஓர் உணவைத் தரவேண்டும் என்று நினைத்தேன். வெறுமனே அது உணவாக இல்லாமல், ஒரு நல்ல அனுபவத்தைத் தருவதாக இருக்க வேண்டும்...’’ என்கிறார் தால் மக்கானி கேப்பச்சினோவைக் கண்டறிந்த ஹுசைன்.

த.சக்திவேல்