5000 திரையரங்குகள் மூடல்!



தலைப்பைப் படித்ததும் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம். இது சீனாவில். ‘‘கொரோனோ வைரஸ் தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட முடக்கத்தால், லாபமின்மையால் 40% திரையரங்குகள் மூடப்பட வாய்ப்பிருக்கிறது...’’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளது சீனத் திரைப்பட சங்கம்.
சீனாவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகள் இருக்கின்றன. கடந்த வருடம் சினிமா டிக்கெட் விற்பனையின் மூலமாக 64.2 பில்லியன் யுவானை ஈட்டியது சீனா.

லாக்டவுனில் கோடிக்கணக்கான சீனர்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் மூழ்கிவிட்டார்கள். மறுபடியும் அவர்கள் திரையரங்குக்கு வருவது கடினம். பத்தில் நான்கு திரையரங்குகள், அதாவது ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் அங்கே மூடப்படலாம்.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவில் இருக்கைகளை வைத்து திரையரங்கை திறக்க முயற்சித்துவருகிறது சீனா. ஒருவேளை திரையரங்குகள் திறப்பது தாமதமானால் 91% வருமானத்தை இழக்க நேரிடும்... திரையரங்குகள் மூடப்படுவதும் அதிகரிக்கும் என்கிறது சீனத் திரைப்பட சங்கம்.l

த.சக்திவேல்