பணிப்பெண் வேலைக்குச் சம்பளம் ரூ.18.5 லட்சம்!‘பிரிட்டன் ராணி எலிசபெத்துக்குச் சொந்தமான விண்ட்ஸர் கோட்டைக்கு வீட்டுப் பணியாளர் தேவை’ - என்பதுதான் டுவிட்டரில் சமீபத்திய ஹாட் டாக். கோட்டையைப் பளிச்சென பராமரித்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியப் பணி. அரண்மனையிலேயே தங்கிக்கொள்ளலாம். உணவு இலவசம், பயணப்படிகள் உண்டு.

வாரத்துக்கு ஐந்து நாட்கள்தான் வேலை. இதுபோக வருடத்துக்கு 33 நாட்கள் விடுமுறை. இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர் விண்ட்ஸர் கோட்டை மட்டுமல்லாமல் இங்கிலாந்தின் ராஜ குடும்பத்துக்குச் சொந்தமான மற்ற அரண்மனைகளிலும் சில காலம் பணி செய்ய வேண்டும் என்பது நிபந்தனை.

பணிக்கு விண்ணப்பிப்பவருக்கு ஆங்கிலமும் கணிதமும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். உங்களுடைய வேலை அரண்மனை நிர்வாகத்திற்குப் பிடித்திருந்தால் பணி நிரந்தரமாக்கப்படும். இந்த வேலைக்கு ஆரம்ப சம்பளம் வருடத்துக்கு 18.5 லட்ச ரூபாய்!

த.சக்திவேல்