பாம்பு விஸ்கி!



ஜப்பானில் உள்ள ரியுகியூ தீவில் வசித்து வரும் ஒரு பாம்பு இனம், ஹபு. விஷத்தன்மைகொண்ட பாம்பு இது. இந்த பாம்பைக் கொண்டு ஜப்பானியர்கள் ஒருவகை விஸ்கியைத் தயார் செய்கின்றனர். ஹபுசு என்பது அதன் பெயர். அதாவது அரிசி, ஆல்கஹாலைக் கொண்டு விஸ்கியைத் தயார் செய்து ஒரு கண்ணாடிக் குடுவையில் நிரப்பிவிடுவார்கள்.

பிறகு அந்தக் குடுவைக்குள் பொருந்தும் அளவுள்ள ஹபு வகை பாம்பை பிடித்து வருவார்கள். விஸ்கி இருக்கும் குடுவைக்குள் அந்த பாம்பை இட்டு, குடுவையை அடைத்துவிடுவார்கள்.
பாம்பின் விஷத்தன்மையை ஆல்கஹால் போக்கிவிடும். குறிப்பிட்ட காலம் வரை அந்த பாம்பு விஸ்கி குடுவைக்குள் இருக்கும். முழுமையாக விஸ்கி தயாரானதும் அதை ஹபுசு என்று விற்பனை செய்வார்கள். பாம்பு அடைக்கப்பட்ட குடுவையுடனே ஹபுசு கிடைக்கும்.

ஹபு வகை பாம்பு தனது இணையுடன் தொடர்ந்து 26 மணி நேரம் வரை உறவு வைத்துக்கொள்ளக்கூடிய திறன் கொண்டது. அதனால் ஹபுசுவைக் குடித்தால் தங்களுக்கும் பாம்பின் திறன் கிடைக்கும் என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.

த.சக்திவேல்