ரூ.1 கோடி!



கடந்த சில நாட்களாக டுவிட்டரில் ஒரு விவாதம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதாவது தில்லி, மும்பை, குருகிராம் போன்ற பெரு நகரங்களில் வாழ்வதற்கு ஒரு கோடி ரூபாய் போதாது என்று ஒருவர் பதிவிட்டிருந்தார். 
இந்தப் பதிவுதான் விவாதத்துக்குக் காரணம். ஆம்; தில்லி, மும்பை, குருகிராம் போன்ற நகரங்களில் மையப்பகுதியில், நகரத்துக்குள்ளான பகுதிகளில் ஒரு கோடி ரூபாய்க்கு வீடுகளே இல்லை. அத்துடன் தனியார் பள்ளிக்கட்டணங்களும் லட்சங்களில் எகிறுகிறது.

சில சர்வதேச பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டுமானால் கோடி ரூபாய் அன்பளிப்பாக வழங்க வேண்டும். இனிமேல் ஒரு கோடி ரூபாய் கூட மிகச் சாதாரணமான ஒரு தொகையாக மாறிவிடும் என அந்த விவாதம் சென்றது. 

இதற்கு உதாரணம், சமீபத்தில் குருகிராமில் ஓர் அடிக்குமாடி குடியிருப்பின் விற்பனை அறிவிக்கப்பட்டது. அந்த குடியிருப்பில் இருந்த 224 பிளாட்டுகளும் 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன. அந்த 224 பிளாட்டுகளுக்காக 800 பேர் காசோலையைத் தந்திருக்கின்றனர். அங்கே ஒரு பிளாட்டின் குறைந்தபட்ச விலையே 2 கோடி ரூபாய்!

த.சக்திவேல்