பனிக்கட்டி திருமணம்!



உலகையே வியக்க வைத்திருக்கிறது சமீபத்தில் நடந்துமுடிந்த பிரிட்டிஷ் கார் ரேசர் டேரன் லியுங் மற்றும் லூசி லியுங் உடனான திருமண நிகழ்வு. இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்திற்காக தேர்ந்தெடுத்த இடம் சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட். 
ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் மேட்டர்ஹார்ன் மலையில் சுமார் 2 ஆயிரத்து 727 மீட்டர் உயரத்தில் பனிக்கட்டிகளுக்கு நடுவே தங்கள் திருமணத்தை ஜில்லென கோலாகலமாக நடத்தினர்.

இந்நிகழ்வின் புகைப்படங்களும், வீடிேயாக்களும் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இதற்கான மலர் வடிவமைப்பை ஐஎம் ஃப்ளவர் என்ற நிறுவனம் 40 நாட்கள் கடும் பனிப்பொழிவிற்கு இடையே செய்துள்ளது. திருமணத்திற்கான ப்ளான், டிசைன் உள்ளிட்டவற்றை தெஹியா நார்வெல் ஈவென்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது.

பி.கே.