வாலிப வயோதிக அன்பர்களே..!



 நாம வாலிப வயசை கடந்துட்டோம்ங்கிறதுக்கான சில அறிகுறிகள்...

* தொப்பையை பத்தின கவலையை மறக்க ஆரம்பிச்சிருப்போம்... தொப்பைதானே... கழுதை இருந்துட்டுப் போகட்டும்ங்கிற மைண்ட் செட்க்கு வந்திருப்போம்.

* முடி கொட்டுறதையும் இக்னோர் பண்ண ஆரம்பிச்சிருப்போம். முடிதானே கொட்டுது... மூளை இல்லல்லன்னு சமாதானம் ஆகியிருப்போம்.

* மீசைல இருக்கிற வெள்ளை முடியைப் பாத்துப் பாத்து கட் பண்ணிருப்போம்; ஆனா, இப்போ அது இருந்துட்டுப் போகுதுன்னு விட்டுடுவோம்.

*  ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு தெனாவெட்டா திரிஞ்ச நாம ரஸ்க் சாப்பிடுறதே ரிஸ்க்ங்கிறத உணரத் தொடங்கிருப்போம்.

* பலகாரக் கடைல குடும்பத்துக்கு வெங்காய பக்கோடாவும் நமக்கு ஸ்பெஷலா பாவக்கா பக்கோடாவும் வாங்கிப்போம்.

* டீக்கடைல சக்கரை தூக்கலா போடச்சொல்லி டீயை சாப்பிட்ட நாம, ‘சக்கரையை கம்மியா போடுப்பா’ன்னு சொல்ல ஆரம்பிச்சிருப்போம்.

* பைக் மேல இருந்த காதல் போயி ஸ்கூட்டர் மேல காதல் வந்திருக்கும்.

* ஒரு கல்யாணம் காட்சின்னா வித விதமா பாத்துப் பாத்து டிரஸ் பண்ணின நாம பீரோல இருக்கிற எதையாவது ஒன்ன எடுத்துப் போட்டுப் போவோம்ங்கிற மைண்ட் செட்க்கு வந்திருப்போம்.

* பொது இடங்கள்ல அழகான பொண்ணு / பையன்களப் பாத்தா இது நம்ம பையன் / பொண்ணுக்கு பொருத்தமா இருக்கும்லன்னு மனசு ஆட்டோமேட்டிக்கா கணக்குப் போடும்.

* பொண்டாட்டி திட்டுனா கோவப்படாம, ‘பாவம் அவளுக்கும் நம்மள விட்டா வேற யாரு இருக்கா’ன்னு டேக் இட் ஈஸியா எடுத்துப்போம்.

* ஊட்டி, கொடைக்கானல்ன்னு ட்ரிப் போகத் தோணாது. பதிலா பழனி, திருப்பதின்னு போகத் தோணும். 

பொம்மையா முருகன்