உன்ன பார்த்தா பொறாமையா இருக்கு வனஜா!
-உன்னயப் பாக்கும்போதெல்லாம் எனக்குப் பொறாமையா இருக்கு வனஜா..! - நெஜமாவா..? - மதர் ப்ராமிஸ்..! - பொய் சொல்லாதீங்க... - அட... நிஜமாதாம்மா...
- அப்படினா எதுக்காக பொறாமைப் பட்டீங்க..? அழகா இருக்கேனே... அதுக்காகவா? - இல்ல... - அதிகம் படிக்கலைன்னாலும் அறிவா பேசுறேனே... அதுக்காகவா? - இல்ல...
- நல்லா சமைக்கிறேனே... அதுக்காகவா? - இல்ல... - உங்க அம்மா அப்பாட்ட தன்மையா நடந்துக்குறேனே... அதுக்காகவா? - இல்ல...
என் கையெழுத்து அழகா இருக்கே... அதுக்கா? - இல்லவே இல்ல... - அப்புறம் வேற எதுக்கு என்னப் பாத்து பொறாமைப் பட்டீங்க..? - உனக்குதான் எத்தனை அழகான, அறிவான புருஷன் கிடைச்சிருக்கான்... அத நெனச்சித்தான் பொறாமைப் பட்டேன்...
- என்னது... எடுடா அந்தக் கரண்டிய..!
தொகுப்பு: பொம்மையா முருகன்
|