மிடில் க்ளாஸ் மைண்ட் செட்!



-நீ ஒவ்வொரு தடவயும் வீட்டுக்கு வாங்கிட்டுப் போற ஒரு கிலோ தக்காளில 2 பழமாவது கெட்டுப் போயிருக்குமே...
- ஆமாம்ப்பா...
- நீ வாங்கற, சாப்பிடுற பிரியாணில என்னைக்குமே லெக் பீஸ் வந்திருக்காதே..?
- ஆமாம்ப்பா...

- நீ போறப்பல்லாம் ரயில்வே ஸ்டேஷன்ல, மெட்ரோல இருக்கிற எஸ்கலேட்டர் வேலை செய்யாதே..?
- ஆமாம்ப்பா...
- சிக்கன் பப்ஸ்ல சிக்கனே இருக்காதே..?
- ஆமாம்ப்பா...

- சிட்டி பஸ்ல உக்கார எடம் கெடைக்காது... அப்படியே கெடைச்சாலும் உடனே நீ எறங்கிற ஸ்டாப் வந்துடுமே..?
- ஆமாம்ப்பா...
- ‘அடுத்த 48 நாள்ல உன்னோட எல்லா கஷ்டமும் தீர்ந்திடும்’னு நீ பாத்த ஒவ்வொரு ஜோசியக்காரனும் சொல்லிருப்பானே..?
- ஆமாம்ப்பா...

- டூ வீலர் மெக்கானிக் வண்டி ரிப்பேருக்கு 500 ரூபா செலவாகும்னு சொல்லி கடேசில 3000 ரூபாக்கு பில் கொடுத்திருப்பானே..?
- ஆமாம்ப்பா...
- கிரிக்கெட் பாக்கலாம்னு டிவிய ஆன் பண்ணி உக்காரும் போது கரெக்ட்டா உனக்குப் பிடிச்ச பேட்ஸ் மேன் அவுட்டாயிட்டு போவானே..?
- ஆமாம்ப்பா...

- ஆசையா ரெயின் கோட் வாங்குவ... ஆனா, அத போடுற சந்தர்ப்பமே வந்திருக்காதே..?
- ஆமாம்ப்பா...
- நீ வீக் டேஸ்ல சலூனுக்கு போனாலும் அங்க உனக்கு முன்ன 3 பேர் வெயிட்டிங்ல உக்காந்திருப்பாங்களே..?

- ஆமாம்ப்பா... ஆமா... எல்லாத்தையும் நேர்ல பாத்த மாதிரி புட்டுப் புட்டு வைக்கிறியே... நீ ஜோசியன் இல்லப்பா... மகான்ப்பா...
- முண்டம்... மேல நான் சொன்னதெல்லாம் மிடில்கிளாஸ் மைண்ட் செட். இது எல்லோருக்கும் நடக்குறதுதான்... அடுத்தத் தடவ வர்றப்பவாவது ஜாதகத்த எடுத்துட்டு வா. இந்த மாதிரி பழைய பேங்க் பாஸ்புக்க  எடுத்துட்டு வராத... இதுல இந்த பாஸ் புக்குக்கு ஸ்கூல் நோட்டுக்கு அட்டை போடுற மாதிரி அட்டைய வேற போட்டு வெச்சிருக்க...