ஜோக்ஸ்





‘‘டாக்டர் ஏன் டென்ஷனா கத்திக்கிட்டிருக்கார்..?’’
‘‘ஆபரேஷன் தியேட்டர்ங்கிற போர்டை யாரோ ‘ஆப்பு’ரேஷன் தியேட்டர்னு மாத்தி எழுதிட்டுப் போயிட்டாங்களாம்...’’
- பிரியதர்ஷன், சேலம்.

‘‘அது என்ன அரசியல்வாதி நடத்தற ஓட்டலா..?’’
‘‘ஏன் கேட்கறீங்க..?’’
‘‘பின்னே... அந்த ஓட்டல் பேப்பர் ரோஸ்ட்ல கூட எதிர்க்கட்சித் தலைவரைத் திட்டி அறிக்கை இருக்கே!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

பி.பி. கன்ட்ரோல் பண்ண மாத்திரை போட்டுக்கலாம். டிராபிக் கன்ட்ரோல் பண்ண மாத்திரை போட்டுக்க முடியுமா?
- தினமும் டிராபிக்கில் மாட்டிக் கொண்டு அவதிப்படுவோர் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

‘‘தலைவர் இருக்கும் இடம் கோயில்னு சொன்னது தப்பா போச்சு...’’
‘‘ஏன்... என்ன ஆச்சு?’’
‘‘அவர் வீட்டு வாசல்ல ஏகப்பட்ட பிச்சைக்காரங்க வந்து உக்கார்ந்துட்டாங்க..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘தலைவருக்கு டாக்டர் பட்டம் தந்தது தப்பா போச்சு...’’
‘‘ஏன்... என்ன செய்தார்?’’
‘‘மணல் ஊழல், நிலக்கரி ஊழல்லாம் போரடிச்சுப் போச்சாம்... கிட்னி ஊழல் பண்ணலாமான்னு கேட்கறாரு!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

என்னதான் பெரிய ஜோசியரா இருந்தாலும், ஸ்வீட் ஸ்டாலுக்குப் போனா ‘பலகாரம்’தான் வாங்க முடியும். ‘பரிகாரம்’ எல்லாம் வாங்கவே முடியாது.
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

லவ் ‘ஒன் சைடு’ம் பண்ணலாம்... ‘டூ சைடு’ம் பண்ணலாம்... கடைசியா ‘சூசைட்’தான் பண்ணக் கூடாது.
- லவ் பத்தி ஃபோர் சைடும் யோசிப்போர் சங்கம்
- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.