‘பாஸ்வேர்டு’ன்னு சொல்றோம்... அது எத்தனாங் கிளாஸ் படிச்சி பாஸ் பண்ணுச்சாம்னு யாராவது சொல்றாங்களா?
- மவுசால் மவுசு அடைந்தோர் சங்கம்
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
‘‘டாக்டர்... என்னைக் கைவிட்டுட மாட்டீங்களே..?’’
‘‘நான் கைவிட மாட்டேன்... நர்ஸ் கை விட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்ல!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘தலைவர் ஏன் டென்ஷனா இருக்கார்..?’’
‘‘அவரோட நாலு சின்ன வீடுகள், வீட்டுக்குள்ள நுழையறதுக்கு அவருக்குத் தடை விதிச்சிட்டாங்களாம்!’’
- வைகை ஆறுமுகம், வழுதூர்.
‘‘படத்துல அந்த நடிகர் முகம் மட்டும் இருட்டா இருக்கே... ஏன்?’’
‘‘அவர்தான் ‘பவர்கட்’ ஸ்டார்!’’
- அம்பை தேவா, சென்னை-116.
நிலக்கரியில கரன்ட் எடுக்கலாம்; ஆனா பேக்‘கரி’யில கரன்ட் எடுக்க முடியுமா?
- கரன்ட் கட்டால் கடுப்பாகி கண்டபடி யோசிப்போர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘டாக்டர், அந்த பேஷன்ட்டோட உறவுக்காரங்களுக்கு உங்களைப் பற்றி தெரியும் போலிருக்கு...’’
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘நீங்க ஆபரேஷனை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அழ ஆரம்பிச்சுட்டாங்க டாக்டர்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.
காய்கள், பழங்கள், மரங்கள், கேக், பிரெட் எல்லாத்தையும் ‘துண்டு துண்டா’ வெட்டலாம். ஆனால் அவற்றை வேஷ்டிகளாகவோ, ஷர்ட், பேன்ட்டுகளாகவோ வெட்ட முடியாது!
- கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு வெட்டத் துடிப்போர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.