ஜோக்ஸ்





‘‘ஹலோ... போலீஸ் ஸ்டேஷனா? எங்க வீட்டுல வச்சிருந்த பத்தாயிரம் ரூபாய்ல எவனோ ஒன்பதாயிரம் ரூபாயை திருடிக்கிட்டுப் போயிட்டான் சார்!’’
‘‘அப்ப மீதி அந்த ஆயிரம் ரூபாய் எங்க மாமூல் பங்கா இருக்கும். அட்ரஸ் சொல்லுங்க... இப்ப வந்து வாங்கிக்கிறோம்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘ஏன் அந்த டாக்டர் கடுப்பா போறாரு..?’’
‘‘அட்மிட் ஆகி இருக்கும் நம்ம கட்சியினரை மனிதாபிமானத்தோடு டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லி தலைவர் கேட்டுக்கிட்டாராம்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘கூட்டம் அதிகம் இருக்கற இடத்துலதான் தலைவர் பேசுவார்...’’
‘‘அதுக்காக எதிர்க்கட்சிக்காரங்க மீட்டிங்ல போய் பேசறது நல்லாவா இருக்கு..?’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘நம்ம போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.ஐயும், ஏட்டும் அடிக்கடி கட்டிப் புரண்டு சண்டை போடுறாங்களே... ஏன்?’’
‘‘கபாலிக்கு சண்டைன்னா ரொம்பப் பிடிக்குமாம். அவனை குஷிப்படுத்தத்தான் அப்படிப் பண்றாங்க..!’’
-ஆர்.நெடுஞ் செழியன், திருவாவடுதுறை.


‘‘அந்த பழைய பேப்பர் வியாபாரி பாவ மூட்டையைச் சுமக்கறார்னு ஏன் சொல்றே..?’’
‘‘தலைவருக்கு வந்த குற்றப் பத்திரிகைகளை எடைக்கு வாங்கிட்டுப் போறாரே...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

ஸ்பீக்கரு...
ஷூக்களை எவ்வளவு வீசினாலும் தலைவர் தாங்கிக் கொள்வார். ஆனால் ஷூக்களின் உள்ளே துவைக்காத சாக்ஸை வைத்து மட்டும் வீசாதீர்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...’’
- ஜே.கமலம், நெல்லை.

தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் பெரிய குடிகாரரா இருந்தாலும், அவர் வீட்டு லைட் ஸ்விட்ச்சை ‘ஆஃப்’தான் பண்ண முடியும். ‘ஃபுல்’ பண்ண முடியாது.
- குவார்ட்டர் அடித்து மேட்டர் சொல்வோர் சங்கம்
-அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.