அவரே ஒரு டெம்பிள்!





காசநோய் அறிகுறிக்கான பயோடேட்டா கண்டு தெளிவு பெற்றாலும், ‘அந்த நோய் வந்தால்...’ எனும் ‘பய’டேட்டாவைப் படித்து அதிர்ச்சியில் உறைந்து போனேன்!
- முத்தையா தம்பி, சிதம்பரம்.

‘தேசிய மாதிரிப் பள்ளிகள்’, ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை நிர்மூலமாக்கும் திட்டம். எல்லாமே தனியார் மயமாகிப் போனால் சுதந்திர மும், ஜனநாயகமும் எதற்கு?
- எம்.எஸ்.இப்ராகிம், சென்னை-91.

தனக்கு கோயில் கட்டுவதை விரும்பாமல், ஏழைகள் மீதும் ஆதரவற்றோர் மீதும் இரக்கம் காட்டச் சொல்லியிருக்கும் ஹன்சிகா, எங்கள் மதிப்பில் எவ்வளவோ உயர்ந்து விட்டார். உண்மையில் அவரே அன்பில் உயர்ந்து நிற்கும் டெம்பிள்!
- ஆர்.அஜிதா, கம்பம்.

கார்ட்டூன்கள் மூலமாக பார்த்துணர்தல் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு சிறு அளவு மட்டுமே உதவும் எனப் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடும்வண்ணம் அமைந்திருந்தது ‘அமுதமா விஷமா’ கட்டுரை!
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

சரக்கு உயர்ந்ததாய் இருந்தால் அச்சமோ,
அண்டிக் கொள்ள ஆதரவோ தேவையில்லை. பிரபு சாலமன் ‘தில்’லாய் இருப்பதும் அவரது திறமை மேல் கொண்ட தன்னம்பிக்கையால்தான்!
- ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.

‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ படங்கள் ஹிட்டான சந்தோஷத்தை நயன்தாரா மனம் திறந்து வெளிப்படுத்தியிருக்க வேண்டாமா? பொத்தி வச்ச மல்லிகை மொட்டாக நயன் போட்டோவை வைத்த உம்ம
பேச்சு ‘கா’!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘காதலி தன் காலடியில் கிடக்க வேண்டும் என்பதே ஆண்களின் நினைப்பு’ என பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் விளாசியிருப்பது ரொம்ப ஓவர். ஆண்கள் எல்லாம் ராவணர்கள் இல்ல அம்மணி!
- எஸ்.சூரஜ் குமார், திருப்பூர்.

தூத்துக்குடி மாவட்ட குலசேகரப்பட்டினமே ராக்கெட் தளத்துக்கு உகந்த இடம் என்று தெரிந்தும் ‘இஸ்ரோ’, ஆந்திரா பக்கம் போயிருப்பது
மங்கள்யான் சாதனையைக் கூட மறக்கடிக்கும் அவலம்!
- பி.கே.ரத்னம், புதுச்சேரி.

ஷங்கர்பாபு எழுதும் ‘வேலைக்குப் போகாதீர்கள்’ கட்டுரை, மிகவும் பயனுள்ள கருத்துகளையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. இத்தொடரை கத்தரித்து பாதுகாத்து பெட்டகத்தில் வைக்க வேண்டும்.
- மா.மாரிமுத்து, ஈரோடு.

வழக்கொழிந்து வருகிற சிறுவர் இலக்கியத்தைப் பற்றி அனைவர் மனதிலும் உள்ள ஆதங்கத்தை எழுத்தாளர் யூமா வாசுகி, மனதில் பதியும் வண்ணம் சொல்லிவிட்டார்.
- கவியகம் காஜூஸ், கோவை-24.