ஸ்பீக்கரு...





‘‘எங்கள் தலைவர் மீது செருப்புகளை வீசுவதால் இழப்பு உங்களுக்குத்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்... இருநூறு ரூபாய்க்குக் குறைவாக செருப்பு கிடைக்கிறதா... சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

தத்துவம் மச்சி தத்துவம்

‘‘என்னய்யா இது... திருப்பதி போய் சாமி கும்பிட்டுட்டு தலைவர் அல்வா வாங்கிட்டு வந்திருக்கார்?’’
‘‘எதையுமே அவர் வித்தியாசமாகத்தான் செய்வார்னு சொன்னதை நம்ப மாட்டேன்னியே...’’
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘‘என் புருஷன் இங்கே வந்து ஆபரேஷனுக்கு அட்மிட் ஆயிருக்காரா டாக்டர்?’’
‘‘ஏன் கேக்கறீங்க..?’’
‘‘உன்கூட வாழறதை விட சாகலாம்னு கோபமா சொல்லிட்டுக் கிளம்பினார். அதான்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘த லைவர் மேக்கப் இல்லாம வெளியே வந்தது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘அவரோட உருவ பொம்மைன்னு நினைச்சு, அவரையே கொளுத்த வந்துட்டாங்க!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

‘‘பேங்க்கைதிறந்து வைக்க தலைவரேதான்
வரணுமா... ஏன்?’’
‘‘இருந்த ஒரு சாவியும் தொலைஞ்சு போச்சு... அதான்!’’
- சி.சாமிநாதன், கோயமுத்தூர்.

என்னதான் ஆட்டுக்கறியை சாப்பிட்டுட்டு ஒரு தூக்கம் போட்டாலும், அதைக் ‘கோழித் தூக்கம்’னுதான் சொல்லுவாங்களே தவிர ‘ஆட்டுத் தூக்கம்’னா சொல்லப் போறாங்க?
- சிக்கன் சாப்பிட்டு சிக்கனமாக தூங்குவோர் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.