தத்துவம் மச்சி தத்துவம்



எங்களை யாரும் தனிமைப்படுத்த முடியாதுன்னு தலைவர் எதை வச்சு சொல்றார்..?’’
‘‘கட்சில இருக்கிற நாலே நாலு பேரை வச்சுத்தான்!’’
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.

ஈவ் டீஸிங் செஞ்சாலும் மரண தண்டனைதான் போல...’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘என்னை கேலி செஞ்ச எட்டாம் நம்பர் பேஷன்ட்டுக்கு டாக்டர் ஆப்ரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டார்...’’
- அ.பேச்சியப்பன்,
ராஜபாளையம்.

விசாரணை தொடங்குறதுக்கு முன்னாடியே தலைவரை சி.பி.ஐ கைது செய்யறாங்களே... ஏன்?’’
‘‘சி.பி.ஐ கேட்கப் போற எல்லா கேள்விகளுக்கும் வேஷ்டியில ‘பிட்டு’ வச்சிருந்தாராம்...’’
- யுவகிருஷ்ணா,
தூத்துக்குடி.

மீட்டிங் முடிஞ்சும் ஏன் கூட்டம் கலையலை..?’’
‘‘தலைவர் சொன்ன குட்டிக் கதைல க்ளைமாக்ஸ் சரியில்லைன்னு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கறாங்களாம்!’’
- அம்பைதேவா,சென்னை-116.

நான் பேசப் பேச ஜனங்க கலைஞ்சு போறாங்களேய்யா..?’’
‘‘உங்க பெருமைக்கும் ஒரு அளவு இருக்கு... அவங்க பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு தலைவரே!’’
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.

என்னதான் எழுத்தாளர் வீட்டுக் கோழி போட்ட முட்டையா இருந்தாலும், அந்த முட்டையிலயும் வெள்ளைக்கரு, மஞ்சள் கருதான் இருக்கும்; ‘கதைக்கரு’ இருக்காது!
- கருவைக் கொண்டு விறுவிறுவென தத்துவம் உருவாக்குவோர் சங்கம்
- ராம்ஆதிநாராயணன்,
தஞ்சாவூர்.

டவையில பார்டர் சரியில்லைன்னா மாத்திக்கலாம்; தேசத்தோட எல்லையில பார்டர் சரியில்லைன்னா மாத்திக்க முடியமா?
- அடிக்கடி புடவை வாங்கும் தாரத்தால் பொருளா‘தாரத்தை’ இழந்தோர் சங்கம்
- பெ.பாண்டியன்,
காரைக்குடி.