ஆட்டோ அனுப்பணும்!



‘2024... சில தலைப்புச் செய்திகள்!’ படித்ததும் இப்படியெல்லாம் நடக்குமா என பல்ஸ் எகிறியது. எது எப்படி மாறினாலும் இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் நிலையும், கூடங்குள மின் உற்பத்தி நிலையும் அப்படியே இருப்பது செம கலகல!

- ஆர்.அஜிதா, கம்பம்.

புரியாமல் பேச கற்றுத் தருகிறோம் என்று நகைச்சுவையோடு நகைச்சுவையாக இலக்கியவாதிகளின் மேதாவிப் பேச்சுக்களை நார்நாராக்கித் தொங்க விட்டு விட்டீரே. ஆமாம், யாரந்த இலக்கிய கோயிந்து? அட்ரஸ் கிடைக்குமா ஆட்டோ அனுப்பணும்!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.
எல்லோரையும் போல 2013ம் ஆண்டையே திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்காமல், 2014ம் ஆண்டில் சாதிக்கப் போகும் நம்பிக்கை இளைஞர்களை முன்பே அடையாளம் காட்டியது சூப்பர்!
- எம்.குணசேகரன், வேலாயுதம்பாளையம்.
நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தங்கள் திருமண அழைப்பிதழ்களையே பத்திரப்படுத்தி வைக்காத இந்தக் காலத்தில், கல்யாண கார்டுகளையே இலக்கியமாக்கி ஆய்வு செய்யும் பெருமாள்
முருகனுக்கு சபாஷ்!
- அய்யாறு வாசுதேவன், சென்னை-14.
அமெரிக்கப் பெண் அதிகாரி தேவயானிக்காக குரல் கொடுத்த இந்தியா, மற்ற நாடுகளில் அல்லல்படும் தமிழர்களுக்குக் குரல் கொடுக்காதது வேதனையே!
- ரேவதிப்ரியன்,
ஈரோடு.
‘ஒன்றே சாதி... அது காந்தி சாதி!’ எனப் பெரியவர் வேலு காந்தி சொல்வது நல்ல பிளான்தான். ஆனால், ஜாதியில் ஊறிவிட்ட நம் மக்களிடம் இந்த கான்செப்ட் எடுபடுமா? என்பதுதான் கேள்வி.
- இரா.வளையாபதி,
தோட்டக்குறிச்சி.
சிறைச்சாலைகளில் அமைதி தவழத் தொண்டாற்றும் பேராசிரியர் நோவாவை விருதும் அங்கீகாரமும் வாவா என்றழைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை!
- பூ.சீனிவாசன்,
திருவண்ணாமலை.
விடியக்காலையில் பார்க்கில் கூடி நின்று கர்ண கொடூரமாகச் சிரிப்பதைப் பற்றி இமான் அண்ணாச்சி சொன்ன கமென்ட் கிச்சுகிச்சு. அவர் சிரிப்பு சபதத்தை புது வருடத்தில் சீரியஸாகவே எடுக்கலாம் என்றிருக்கிறோம்.
- மா.மாரிமுத்து, ஈரோடு.
‘ஜில்லா’, ‘வீரம்’ படங்களின் கதை என்னவென்று கல்லூரி இளசுகள் கலாய்த்த விதம் படு ஷார்ப் ப்ளஸ் கலகலப்பு. இது போன்ற லொள்ளுகள் தொடருமா தலைவா?
- த.சத்தியநாராயணன்,
அயன்புரம்.
‘பிரியாணி’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களின் விமர்சனம் படித்தேன். விமர்சனம் எழுதும் உமக்கு கண்டிப்பாக விருது வழங்க வேண்டும். உங்கள் நியாயத் தராசு இன்று போல் என்றும் வாழ்க.
- லட்சுமி மணிவண்ணன்,
சிக்கல்.