தத்துவம் மச்சி தத்துவம்



கல்யாணம், காதுகுத்துன்னா எல்லோரும் சொந்த பந்தத்தோடதான் வருவாங்க. யாரும் தீப்பந்தத்தோட வர மாட்டாங்க!
- பவர்கட்டில் பந்த பாசமில்லாமல் இருப்போர் சங்கம்
- பெ.பாண்டியன்,காரைக்குடி.

என்னதான் ஒருத்தர் வம்பை ‘விலைக்கு’ வாங்கினாலும், அதுக்கெல்லாம் ‘ரசீது’ தர மாட்டாங்க!
- வம்படியாய் தத்துவங்களைச் சொல்வோர் சங்கம்
- ஜே.கமலம், நெல்லை-11.

டாக்டர் எனக்கு துரோகம் பண்ணிட்டாரு...’’
‘‘என்னாச்சு, மருந்தை மாத்திட்டாரா..?’’
‘‘இல்ல, மருந்து கொடுத்துட்டு இருந்த நர்ஸை மாத்திட்டாரு!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

இந்த போலீஸ் ஸ்டேஷன்ல ஜோசியர் இருக்காரே... ஏன்?’’
‘‘மாமூல் வாங்க நல்ல நேரம் குறிச்சுக் குடுக்கறதுக்காக வச்சிருக்காங்க!’’
- அம்பை தேவா,
சென்னை-116.

இது ஒரு வித்தியாசமான சோப்புங்க மேடம்...’’
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘நீங்க குளிக்கறப்ப நுரை விடாம... ஜொள்ளு விடும்!’’
- ஜே.தனலட்சுமி, கோவை.

குற்றப் பத்திரிகைன்னா உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்..?’’
‘‘நம்ம கல்யாணப் பத்திரிகைதான்!’’
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.

தலைவரைப் பார்க்க வந்திருப்பவங்க தொகுதி மக்கள்தான்னு எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்ற?’’
‘‘அவரைப் பார்த்து இரண்டு வருஷமாச்சுன்னு சொல்றாங்களே..!’’
- என்.உஷாதேவி, மதுரை.