தீர்வு



‘‘நிஜமாவே என்னை நீங்க விரும்புறீங்களா? நாம கல்யாணம் செஞ்சுக்கிட்டு சந்தோஷமா குடும்பம் நடத்த முடியுமா?’’ ‘‘ஷ்யூர்... நீ இருபதாயிரம் சம்பாதிக்கிறே. நான் இருபதாயிரம் சம்பாதிக்கிறேன். குடும்பம் நடத்த முடியாதா?’’
‘‘கல்யாணத்துக்குப் பிறகும் எங்க அப்பா - அம்மா என்னோட தான் இருப்பாங்க!’’
‘‘ம்ம்... சரி... சமாளிச்சுக்கலாம்!’’
‘‘என் தங்கச்சியும் தம்பியும் என்னோடதான் இருப்பாங்க...’’

‘‘ம்ம்... பார்த்துக்கலாம்!’’
‘‘அம்மாவுக்கு ஆஸ்துமா. அப்பாவுக்கு சுகர். டாக்டர் செலவே மாசம் எட்டாயிரம் ஆகிடும்!’’
‘‘அப்படியா?’’
‘‘தம்பிக்கு புத்தி சுவாதீனம் இல்ல. அவனைப் பார்த்துக்க தனியா ஆள் போடணும். தங்கச்சிக்கும் ஒரு விபத்துல கால் முறிஞ்சிருச்சு. உங்களை மாதிரி ஒருத்தர் மாப்பிள்ளையா வர்ற வரைக்கும் ந £மதான் அவளைப் பராமரிக்கணும்!’’
‘‘என்னது? சரி... சரி... மத்த விஷயங்களை அப்புறமா பேசிக்கலாம். கொஞ்சம் அவசரமா போக வேண்டியிருக்கு!’’
‘அப்பாடா... நான் விட்ட கதையை நம்பி மிரண்டு போய் விட்டான். என் சம்பளத்துக்காக மட்டுமே என்னைச் சுற்றி வந்த இவனால் இனி பிரச்னை இருக்காது!’ - நிம்மதியானாள் அவள்.

தஞ்சை தாமு