சந்தேகம்



‘‘யெஸ் சுஜன்யா! நான் உன்னை இரண்டு வருஷமா டீப்பா லவ் பண்றேன்...’’
‘‘தீபக்... நான் உன்கிட்ட ஜஸ்ட் ஃபிரண்ட்லியாதான் பழகுறேன்.’’
‘‘என்ன சொல்ற? இந்த அஞ்சு வருஷ நட்புல துளிகூட என்மேல உனக்கு லவ் வரலையா?’’
‘‘சாரி தீபக்... நான் இந்த ஐடி ஃபீல்டுல நுழையறதுக்கு முன்னாடியே, எனக்கான வாழ்க்கைத்

துணையை மனசால தீர்மானிச்சிட்டேன். இங்க வழக்கமா நடக்குற கண்டதும் காதல், லிவிங் டுகெதர், டேட்டிங்கிற பேர்ல ஊர் சுத்தறது... இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. நான் நினைச்சவரோட  அடுத்த வாரம் எனக்கு எங்கேஜ்மென்ட். ஜெயப்பிரகாஷ்னு பேரு. ரொம்ப கண்ணியமானவர். என் மனசுல அவர் ஒருத்தருக்குத்தான் இடம்... ப்ளீஸ், எல்லாத்தையும் மறந்துடு!’’ - கண்டிப்பாகச் செ £ல்லிக் கிளம்பினாள் சுஜன்யா.

அவள் போனதும், தீபக் தன் சட்டைப் பையில் ‘ஆன்’ செய்து வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்துப் பேசினான்.
‘‘என்ன ஜெய்! கேட்டியா? நான் சொல்லும்போது நம்பலையே... இப்போ உன் சந்தேகம் எல்லாம் தீர்ந்துச்சா..?’’
‘‘ரொம்ப தேங்க்ஸ் மச்சான்!’’
தன் வருங்கால கணவர் ஜெயப்பிரகாஷும் தீபக்கும் பள்ளி நண்பர்கள் என்பது சுஜன்யாவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. 

யுவகிருஷ்ணா