Like and share



யூத் டியூப்

ஒரு இந்திய கேர்ள் ஃப்ரெண்ட் எப்படி இருப்பாள்?‘‘பெல்ட்டை மாத்து... சாக்ஸை மாத்து... அது உனக்கு செட் ஆகல’’ என நம்மை ஆல்டர் பண்ணி டார்ச்சர் கொடுப்பாள்.‘‘இன்னிக்கு நம்ம முதல் டேட்டிங் ஆனிவர்சரி, இதைக் கூட மறந்துட்டியா?’’ என அடிப்பாள்.‘‘ஏன் எனக்கு போன் பண்ணல? என்ன தைரியம் இருந்தா ப்ளேன்ல இருந்தேன்னு சொல்வே?’’ எனக் கோபிப்பாள்.‘‘அடிக்கடி ஏன் போன் பண்றே... சந்தேகமா?’’ என்றும் கோபிப்பாள்.‘‘நான் குண்டாயிருக்கேனா?’’ என அடிக்கடி கேட்டு சாவடிப்பாள்.

செல்போனில் நடிகை வால் பேப்பரைப் பார்த்தால் ‘‘நான் உனக்கு அழகா தெரியலையா?’’ என மந்திரிப்பாள்.பாக்கெட்டில் காண்டமைப் பார்த்தால் ‘‘மோசமானவன்’’ என பிரேக்கப் ஆவாள். அதுவே நெருக்கமான சமயத்தில், ‘‘காண்டம் இல்லையா? உனக்குக் கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!’’ என்பாள்.இப்படி ஒரு லிஸ்ட் போட்டு அதை விஷுவல் ஆக்கியிருக்கிறது being indian எனும் சேனல். சந்தானம் டைப் கலாய் ஆச்சே... இந்திய இளைஞர்களிடம் இது 11 லட்சம் ஹிட் வாங்கியிருக்கிறது!

அப்பா‘டெக்’கர்

பழைய நோக்கியா போனில் அந்த பாப்புலர் பாம்பு கேம் நினைவிருக்கிறதா? யெஸ், காலம் கடந்து இன்றும் குழந்தைகளை ஈர்க்கும் அந்த விளையாட்டை உருவாக்கியவர் ஃபின்லாந்தைச் சேர்ந்த டானலி ஆர்மான்டோ என்பவர். 1997ல் முதன்முதலாக நோக்கியா 6110 செட்டில் இந்த கேம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்காக இந்த விளையாட்டு வெறும் நோக்கியா காலத்தோடு நின்றுவிட வேண்டுமா என்ன? இதோ, ஸ்நேக் ரீவைண்ட் என்ற பெயரில் அது ஸ்மார்ட் போன் அவதாரம் எடுத்துவிட்டது. பாம்பு பக்கவாட்டு சுவர்களில் இடித்து வெடிப்பதை இனி நாம் ரீவைண்ட் செய்து பார்க்க முடியும். பாம்பு விழுங்குவதற்கென்று ஸ்பெஷல் பவர்கள், விசேஷ கனிகள் என இன்றைய போன்களுக்கு ஏற்ற வகையில் இதையும் ‘பக்கா மாஸ்’ ஆக்கியிருக்கிறார்கள்.

செல்(ஃபி)வாக்கு!

மேக்கப் போட்டாத்தான் அழகா...
நானெல்லாம்
கேஷுவலா கொண்டை
போட்டாலும்
அழகு!