நியூஸ் வே



‘போடா போடி’ இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்போது விஜய்சேதுபதி - நயன்தாராவை வைத்து ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கி வருகிறார். செய்தி என்னவென்றால், விக்னேஷை நயன்தாரா கேரளாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.

கடந்த வாரம் ராகுல் காந்தி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கைத் தொடங்கி, ஒரே நாளில் நாற்பதாயிரம் பேரை ஃபாலோ செய்ய வைத்தார். ஆனால், அதற்கும் மேலாக ஒரு விஷயத்தை பிரதமர் மோடி செய்திருக்கிறார். சீனாவிற்கு விசிட் அடிக்கும் முன்பே, அங்கு நம்ம ட்விட்டர் மாதிரி பிரபலமாக இருக்கும் `வெய்போ’ சமூக வலைத்தளத்தில் கணக்கைத் துவக்கி, ஆறே நாட்களில் 46 ஆயிரம் சீனர்களைப் பின்தொடர வைத்திருக்கிறார்.

‘ருத்ரமாதேவி’ ஸாங் ஷூட். அனுஷ்கா - நித்யா மேனன் காம்பினேஷன் டான்ஸ். அனுஷ்காவோடு நித்யாவின் உயரம் கேமரா ஆங்கிளுக்கு செட் ஆகாததால், நித்யாவை ஹைஹீல்ஸ் போடச் சொல்லிவிட்டார் ஒளிப்பதிவாளர். ``7 இன்ச் உயர ஹீல்ஸ் அது. நிஜமாகவே அது ஹைஹீல்ஸ். என் லைஃப்ல அப்படி ஹீல்ஸ் அணிந்து நடித்ததில்லை. ரெண்டு, மூணு தடவை அதால காயம் ஏற்பட்டுச்சு. இருந்தாலும் அந்த ஹீல்ஸ் அணிந்து நடித்தது மறக்க முடியாதது’’ என சொல்லி சிரிக்கிறார் நித்யா.

ஒரே ஒரு இந்திப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கும் அசின், சமீபத்தில் மும்பையில் நோ பார்க்கிங் ஏரியாவில் தனது காரை நிறுத்தியிருக்கிறார். உடனே காரைப் பறிமுதல் செய்திருக்கிறது போக்குவரத்து போலீஸ். மிகப்பெரிய ‘ஸாரி’க்குப் பின்னர் அசினின் காரை விடுவித்துள்ளனர். என்னம்மா, இப்படிப் பண்றீங்களேம்மா!

அஜித் படத்தை முடித்த பிறகு ‘சிறுத்தை’ சிவாவின் அடுத்த வரிசையில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்னதாக தன் அடுத்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார். அட்லியின் அசோசியேட் பாக்யராஜ்தான் இயக்குநர்.

கேத்ரின் தெரஸா சிம்புவின் புது ஜோடியாகிறார். செல்வராகவன் டைரக்ட் செய்யும் படத்தில் த்ரிஷாவிற்குப் பதிலாகத்தான் இவர். ‘‘மூன்று படங்களுக்கு மேல் கிடைத்தால் சென்னையிலேயே வந்து தங்கி விடுவேன்’’ என்கிறார் தெரஸா. யாராவது புக் பண்ணுங்கப்பா!

‘சிங்கம் 3’ படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி. இதில் ஸ்ருதிஹாசன், சூர்யா ஜோடியாக இணைகிறார்.

தனுஷ் ஜோடியாக நடிக்கும் ‘விஐபி2’ படத்தைப் பற்றி சமந்தா ட்விட்டி இருப்பது எல்லோருக்கும் ஆச்சரியமளிக்கிறது. ‘‘இதுவரை வெளிவந்த என்னுடைய படங்களில் இதுதான் மிகச் சிறந்த படம். இது சத்தியம்’’ என சொல்லியிருக்கிறார். மற்றவர்களுக்கு புகை வராதா சமந்தா?

டாப்ஸியின் நெருங்கிய தோழியும், மோகன்பாபுவின் மகளுமான லட்சுமி மஞ்சு, தெலுங்கில் இப்போது நடித்து வரும் படம் ‘தொங்கட்டா’வில் காமெடி நடிகர் பிரமானந்தத்திற்கு முக்கிய ரோல். கௌரவ வேடத்தில் ராணா நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோகன்பாபுவின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தியில் அக்‌ஷய்குமாருடன் ‘சிங் இஸ் பிளிங்’கில் நடிக்கிறார் எமி ஜாக்சன். இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக கோவா சென்ற எமிக்கு அந்த ஜாலி பூமி மிகவும் பிடித்துவிட, கிடைத்த இடைவெளியில் எல்லாம் கோவாவை ரவுண்ட் அடித்து வருகிறார் செம கூலாக!

`குவான்டிகோ’ எனும் அமொிக்க டி.வி. தொடாில் எஃப்.பி.ஐ ஏஜென்டாக நடிக்கிறார் பாலிவுட் தேவதை ப்ரியங்கா சோப்ரா. அமொிக்காவின் முன்னணி டி.வி. நிறுவனமான ஏபிசி ஸ்டூடியோஸ் தயாாிப்பு இது. அமொிக்க டி.வி. தொடர் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை ப்ரியங்காதான். ‘‘நான் மிகவும் கொடுத்து வைத்தவள். இரண்டு உலகத்திலும் காலூன்றி விட்டேன்’’ என பூரிக்கிறார் ப்ரியங்கா.

‘36 வயதினிலே’ படத்தில் ஜோதிகா அணிந்துவரும் அழகுப் புடவைகள் பற்றி விசாரிக்காத பெண்கள் குறைவு. இந்தப் படத்துக்காக இவற்றைத் தயாரித்து அளித்தது சுந்தரி சில்க்ஸ் நிறுவனம். இப்போது ‘36 வயதினிலே’ பட விளம்பரங்களுடன் சுந்தரி சில்க்ஸ் விளம்பரங்களும் அணிவகுக்கின்றன. படத்தில் ஜோதிகா அணிந்திருப்பது போன்ற தனித்துவமான பாரம்பரிய டிசைன் சேலைகள் சுந்தரி சில்க்ஸில் பரபரப்பாக விற்பனை ஆகின்றன.

அமைச்சரவை மாற்றத்தின்போது மோடியின் நம்பிக்கைக்குரிய அமைச்சராவார் என பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா பற்றி வதந்திகள். ஆனால் அவர் அதை மறுக்கிறார். ‘‘கட்சித் தலைவர் வேலையை நான் ஒழுங்காகத்தான் செய்கிறேன். எதுவும் சொதப்பி பிரதமரின் கோபத்துக்கு ஆளாகவில்லை. அப்புறம் எப்படி நான் அமைச்சர் ஆக முடியும்?’’ எனக் கேட்கிறார் அமித் ஷா. அமைச்சர் ஆக வேண்டும் என்றால், பிரதமரின் கோபத்துக்கு ஆளாக வேண்டுமா?

‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளிவருகிறது. பார்த்துவிட்டு சந்தோஷத்தில் ஓகே சொல்லிவிட்டார் தளபதி.