ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 44

செப்புப் பட்டயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு அந்த நிலம் அந்தக் குடும்பத்திற்கு உரியது என்று எழுதப்பட்டிருந்தது. ஒருவேளை அக்குடும்பத்தவர்களுக்கு வாரிசுகள் தோன்றாமல் அந்தக் குடும்பம்  ஒரு கட்டத்தில் நின்றுபோகுமாயின், அந்த நிலம் கோயிலுக்குச் சேர்ந்துவிடும். ஆனால் இடைக்காலத்தில் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரியவில்லை...

அந்த பட்டயப்படி உள்ள நிலத்தில் யார் யாரெல்லாமோ வீடு கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலர் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். பத்திரம் என்று அவர்களிடம் ஏதுமில்லை. சிலர் பத்திரம் வைத்திருந்தனர். 

என் ஆய்வில் நான் தெரிந்து கொண்ட பேருண்மை என்பது ஒன்றே... மனிதன் நிலங்களை வசப்படுத்த மிகவே போராடியிருக்கிறான். அரசனில் இருந்து ஆண்டி வரை இதற்கு விதிவிலக்கு இல்லை. அதிலும் நீர்வளம் சார்ந்த நிலங்களை மனிதன் மிகவேகமாக தன்வயப்படுத்தினான். மற்ற பூதங்களான காற்று, ஆகாயம், நெருப்பு என்னும் மூன்றும் தானாக வசமாகிவிடும் என்றும் அவன் நம்பியிருந்ததையே நான் என் ஆய்வுகளில் புரிந்து கொண்டேன்.

இதுபற்றியும் நானும் ஜோசப் சந்திரனும் விவாதம் செய்தோம். ஜோசப் இம்மட்டில் ஒருபடி மேலே போய் ‘தமிழனே உலகின் முதல் நாகரிகக் குடிமகன்’ என்றார். எப்படி என்று நான் கேட்கவும் விளக்கத் தொடங்கினார்.

‘இவன் பூகோள அறிவு மிகுந்தவனாகவும் விளங்கினான். அதனாலேயே நிலங்களை இவன் பஞ்ச பூத சக்திக்கேற்ப முல்லை, மருதம், பாலை, நெய்தல், குறிஞ்சி என்று பிரிக்க முடிந்தது. அடுத்து மலைகளை இவன் சக்தி மிகுந்தவையாக உணர்ந்தே, அவற்றைப் பொதுமைப்படுத்த ஒரே வழி அங்கே ஆலயம் எழுப்புவதுதான் என்று அறிந்தான்.

அடுத்து இவன் தனக்கு மேலான சக்தி படைத்த சகலத்தையும் வெகு அழகாய் தன் வயப்படுத்தினான். அதில் யானையை ஒரு அங்குசத்தால் அடக்கியதும், கடல்மிசை பாய்மரப் படகு செலுத்தியதும், முத்துக் குளித்ததும், உலோக அறிவு பெற்று சக்கரங்கள் செய்ததும் மட்டுமல்ல... இவனே கால காலத்துக்குமான ஆவணமாய் கல்வெட்டு எழுத்து முறையைக் கண்டறிந்து அதை நடைமுறைப்படுத்தியவன்.

உலகமெங்கும் நான் பயணம் செய்துள்ளேன். தமிழன்தான் ஒரு சிறு கிராமக்கோயிலில்கூட கல்வெட்டினால் அதன் வரலாற்றைப் பதிவு செய்திருந்தான். அடுத்து பட்டயங்கள்... பிறகே பனை ஏடுகள். மிக உறுதியாக தன் சந்ததியினர் வரும் நாட்களில் இந்த மண்ணில் வாழ்வார்கள் என்று நம்பியதன் விளைவு இது. இந்த தூரப் பார்வையை நான் மேல்நாடுகளில் எங்கும் உணரவில்லை.

அடுத்து, பாரத நாட்டை விடுத்து பிற தேசங்களை கவனித்தவரையில், உடல் பலமும் அறிவுக்கூர்மையும் பெரிதாக இருந்தது. ஆனால் அறிவின் மேலான ஞானம் சார்ந்த ஒரு தன்மையை எங்கும் என்னால் காணமுடியவில்லை. குறிப்பாக இங்கே குரு - சீடன் எனும் முறையும், குருவை கண்ணுக்கு தெரிந்த கடவுளாகக் கருதும் நிலையும் இன்றும் பலமாக இருந்து வருகிறது.

 இந்த குரு - சீடன் முறை பாரத தேசத்துக்குப் பிறகு சீனாவில் இருக்கிறது. அதுகூட இங்கிருந்தே சென்றது. மேல்திசை நாடுகளில் இந்த முறையே இல்லை. இதனால் எழுத்தில் எழுதி வைக்க இயலாத, அல்லது கூடாத விஷயங்கள் அழிந்து போயின.

குரு - சீடன் முறை இருந்திருந்தால், குருவானவர் சீடனுக்கு உபதேசம் செய்துவிட்டுப் போயிருப்பார். அந்த சீடன் பின் குருவாகி தன் சீடனுக்கு உபதேசம் செய்துவிட்டுப் போயிருப்பான். சப்த வடிவில் அது மனதுக்குள் அழியாமல் வாழ்ந்தபடியே இருக்கும்’ - என்று ஒரு நீண்ட விளக்கம் அளித்தார் ஜோசப் சந்திரன்.

இவ்வேளையில் நான் ஜோசப் சந்திரனிடம், ‘அப்படி சப்த வடிவில் வாழும் விஷயங்கள் எவை?’ என்று கேட்டேன்.‘இதைத் தெரிந்துகொள்ள நமக்கு ஒரு குரு அவசியம். குறிப்பாக ஆன்மிக குரு மிக அவசியம். அடுத்து வித்தக குரு என்றும் ஒருவர் அவசியம். மற்ற குருநாதர்களிடம் ரகசியமாக ஒன்றைப் பேண எதுவுமில்லை. சொல்லப் போனால், மற்றவர்கள் ரகசியமாக எதையும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அது பாவமாகும்’ என்றார் ஜோசப் சந்திரன்.

முன்பு ‘அமானுஷ்ய அனுபவத்தை உணர ஒரு குருநாதர் அவசியம்’ என்றேன். இப்போது ரகசியமானதை உணரவும் ஒரு குருநாதர் தேவைப்படுகிறார். இதை நான் ஜோசப்பிடம் கூறவும், ஜோசப் சிரித்தபடியே ‘அமானுஷ்யமும் ரகசியமானதுதானே? எனவே, சதுரகிரியில் அப்படி ஒருவர் நமக்குக் கிட்டுவாரா என்று பார்ப்போம்’ என்றார்!’’  

- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...வர்ஷன் ரஞ்சித்துக்கு போன் செய்ய, ரஞ்சித்தும் அகப்பட்டான். ஸ்பீக்கர் போனில் எல்ேலாருக்கும் கேட்டது.
‘‘ஹாய் வர்ஷன்...’’‘‘ரஞ்சித்! எப்படிடா இருக்கே?’’‘‘ஃபைன்... அப்புறம் நீ இப்ப எங்க இருக்கே?’’
‘‘சொன்னா பொறாமைப்படுவே... பரவாயில்லையா?’’

‘‘என்னடா... ஏதாவது ஃபாரின் கன்ட்ரில ஸ்பாவுல மசாஜ் பண்ணிக்கிட்டு இருக்கியா?’’
‘‘அய்யோ... செம ஐ.க்யூடா உனக்கு! எக்ஸாக்ட்லி...’’
‘‘அப்படி எங்கடா இருக்கே?’’
‘‘பட்டாயாவுல...’’‘‘அங்கேயா?’’

‘‘என்ன அங்கேயா? இப்ப எனக்கு மசாஜ் பண்ணிக்கிட்டு இருக்கறது யார் தெரியுமா?’’‘‘வேண்டாம்டா! என்கூட ப்ரியா இருக்கா. அப்புறம் ஒரு கிரேட் மேன் இருக்கார்...’’‘‘ஓ... ஓ... நல்லவேளை! இப்பவாவது சொன்னியே... இங்க ஒரு வயசானவர் - அதாவது நூறு வயசான ஒருத்தர் - மசாஜ்ல சும்மா பின்னி எடுக்கறார். வர்மப் புள்ளிகளை தூண்டியெல்லாம் விட்றார். சும்மா கிண்ணுன்னு இருக்கு...’’

‘‘எது கிண்ணுன்னு இருக்குன்னு எனக்குத் தெரியும்டா! போகட்டும். நீ எப்ப சென்னை வருவே...’’‘‘நாளைக்கு வந்துடுவேண்டா... இது பேக்கேஜ் டூர்தான்! ஜஸ்ட் இருபத்தி ஏழாயிரம்! இதுல ஸ்டார் ஹோட்டல் ஸ்டேவுல இருந்து, பிரேக் ஃபாஸ்ட்டெல்லாம் அடக்கம். அப்புறம் கிரேட்மேன், கிரேட்மேன்னு நீ யாரைச் சொன்னே?’’

‘‘நீ சென்னைல இருந்தா இப்ப எனக்கு வசதியா இருக்கும். அந்த கிரேட்மேன் பத்தியும் நிறைய சொல்லலாம். ஆனா பட்டாயால பட்டைய கிளப்பிக்கிட்டு இருக்கற உன்கிட்ட இப்ப என்ன பேசறதுன்னே தெரியலையே..’’‘‘நான் என்ன செய்யணும்? அதைச் சொல்...’’

‘‘ஒரு அநாமதேய செல்போன் என்கிட்ட இருக்கு. அதுக்குள்ள இருக்கற சகல விஷயங்களும் தெரியணும்.’’

‘‘இப்பதான் ராயபுரம் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் பேசினார். அவரும் உன்ன மாதிரியே பேசினார். அது ஒரு தற்கொலை செய்துக்கிட்ட போலீஸ் ஆபீசர் செல்போனாம். அதுக்குள்ள தற்கொலைக்கான விடை இருக்கலாம்னார்...’’
‘‘நீ எனக்கு பதில் சொல்!’’

‘‘யாரோடது... உனக்கெதுக்கு இந்த போலீஸ் வேலை..?’’‘‘ரஞ்சித்... விளக்கமா நேர்லதான் என்னால சொல்ல முடியும். நான் இப்ப ஒரு த்ரில்லான ஒண்டர்ஃபுல் அசைன்மென்ட்ல இருக்கேன். எனக்கு உன் உதவி, சப்போர்ட் எல்லாமே வேணும்!’’‘‘வில்லங்கமா ஏதாவது இருந்து என்னை கம்பி எண்ண வெச்சுட மாட்டியே?’’
‘‘நீ என்ன என் விரோதியா... நான் அப்படி நடந்துக்க?’’

‘‘விரோதிகிட்டதான் இப்ப மரியாதையா நடந்துக்கறோம். நண்பன்னா போட்டுப் பாத்துடறோம்...’’‘‘ரஞ்சித்... இது ரொம்பவே பெரிய விஷயம். நடந்ததை, நடந்துக்கிட்டு இருக்கறதை எல்லாம் கேட்டா நீ ஆடிப் போயிடுவே...’’‘‘என்ன? யாராவது பிரபல சினிமா நடிகையை எந்த ஹீரோவாவது பார்ட்டியில் வெச்சு ஆபாசமா வீடியோ எடுத்துட்டானா... அதை டவுன்லோடும் பண்ணிட்டானா - நான் டோட்டலா அதை எரேஸ் பண்ணணுமா?’’

‘‘தூத்தேறி... இப்படி எல்லாம் கூடவா நடந்துருக்கு?’’ - இடையிட்டாள் ப்ரியா.‘‘ஓ... ப்ரியா! ஐ ஆம் சாரி. நீ இருக்கறதை மறந்துட்டேன். இதெல்லாம் ஒண்ணுமேயில்ல ப்ரியா! வாட்ஸ்அப்ல நான் அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வீடியோ அனுப்பறேன்.

 இலங்கை யுத்த களத்துல நடந்த ஒரு சித்ரவதை, தாலிபன்கள் கரகரன்னு கழுத்தை அறுத்து மனித ஆடுகளை வெட்டின சம்பவம், துபாய்ல ஒரு ஷேக் தன் வீட்டு வேலைக்காரியை விதவிதமா சித்ரவதை செய்ததுன்னு மூணே மூணு வீடியோவை மட்டும் பார்.

அப்புறம் தண்ணி அடிச்சாதான் உன்னால தூங்க முடியும்...’’‘‘ஓ... புல் ஷீட்! இதை எல்லாம் பாத்துட்டு உன்னால மட்டும் எப்படி ரஞ்சித் பட்டாயாவுல மசாஜ் பண்ணிக்க முடியுது? உனக்கு மசாஜ் பண்ற தாத்தாவுக்கு நூறு வயசுன்னு வேற அடிச்சு விட்றே... பதினாறு வயது ‘தத்தா’தானே உன்கூட இருக்கறது..?’’

‘‘ப்ரியா... ஐ ஆம் சாரி! நான் தேவையில்லாம பேசிட்டேன். அங்க உங்களுக்கு என்ன பிரச்னை...’’‘‘நேர்ல சொல்றோம். எங்கள வந்து பாக்க முடியுமா?’’

‘‘ஷ்யூர்...’’
‘‘தேங்க்யூ ரஞ்சித்... இண்டியா வந்து லேண்ட் ஆன உடனேயே சொல். எங்க சந்திக்கறதுன்னு சொல்றோம்.’’‘‘எங்கன்னா... நீங்க இப்ப சென்னைல இல்லையா?’’‘‘ஆமாம்...’’‘‘எங்க இருக்கீங்க?’’‘‘இந்த நிமிஷத்துல செங்கல்பட்டு பக்கத்துல இருக்கோம்.’’
‘‘ரைட்... நான் லேண்ட் ஆனபிறகு கூப்பிட்றேன்.’’

- மறுபுறம் ரஞ்சித் போனை முறித்துக்கொள்ள, வர்ஷனும் சற்று வழிசல் சிரிப்போடு ப்ரியாவைப் பார்த்தான்.‘‘இந்த வயசுல யாரும் ஒழுக்கமாவே இருக்க மாட்டீங்களாடா. பாய்ஸ்ல வர்ஜினே கிடையாதா?’’ - ப்ரியா கோபமானாள். அவளுக்கு பதில் கூறத் திணறியபோது அவள் போனில் அமட்டல். மறுபுறம் கணபதி சுப்ரமணியன்!

‘‘ஹாய் தாத்தா... நாங்க இப்ப ஒரு சிவன் கோயிலைத் ேதடிப் போயிட்டிருக்கோம்...’’‘‘எல்லாம் சரியா போய்க்கிட்டிருக்கா..?’’‘‘இந்த செகண்ட் வரை ஒரு பிரச்னையுமில்லை. எல்லாம் தெளிவா இருக்கு - த்ரில்லாவும் இருக்கு...’’‘‘ஜாக்கிரதை... நான் உடம்பளவுலதான் இங்க இருக்கேன். மனசளவுல உங்ககூடதான் இருக்கேன்...’’
‘‘அப்படியே இரு... மை டியர் மம்மி இப்ப எப்படி இருக்காங்க?’’

‘‘ரொம்ப நாளைக்குப் பிறகு இன்னிக்கு பாட்டு பாடி சாதகம் பண்ணினா. புது எலெக்ட்ரீஷியன் வந்து எல்லாத்தையும் பக்கா பண்ணி கொடுத்தான். என்னோட கேலரியைப் பாத்துட்டு உங்ககிட்ட நாகரத்தினக் கல் இருக்கா, கஜமுத்து இருக்கா, நரிப்பல் இருக்கான்னு ஆரம்பிச்சுட்டான். ‘நான் ஆராய்ச்சியாளன்பா,  ஃப்ராடு பக்கிரி இல்லே’ன்னு சொன்னேன். பாத்தியா? ஒரு எலெக்ட்ரீஷியன் கூட மூடநம்பிக்கை சார்ந்த எவ்வளவு விஷயங்களால பாதிக்கப்பட்டிருக்கான்னு...’’

- கணபதி சுப்ரமணியன்  யதார்த்தமாகப் பேச, அந்த சிவன் கோயில் பட்டையான காவிச் சுவர்களோடு கண்ணில் பட்டது. மதில் மேல் நான்கு முனைகளிலும் அமர்ந்திருந்த நந்தி அது சிவன் கோயில் என்பதை ஊர்ஜிதம் செய்தது.

‘‘தாத்தா! கோயில் வந்துடுச்சு... உள்ள போய் பாத்துட்டு அப்புறமா நானே போன் பண்றேன்...’’ - என்று போனை கட் செய்தாள்.காரும் கோயில் முகப்பில் நின்றது. ஒரு பழைய பெயர்ப் பலகையில் ‘ஆதி சொக்கநாதர் சமேத விஜயாம்பிகை  திருக்கோயில்’ என்று இருந்தது.  ஏட்டில் இருந்த ‘அந்த ஆதிசிவன் குடில்’ என்பது ஒத்துப் போயிற்று. மூவரும் காரிலிருந்து இறங்கி உள் நடந்தனர்.

உள்ளே ஸ்பீக்கரில் தேவாரம் ஒலித்தபடி இருந்தது. அங்கும் இங்குமாய் சிலர் மட்டும் தென்பட்டனர். அந்தக் காலத்துக் கோயில். உட்புறத்தில் ஏராளமான வில்வ மரங்கள்! ஒரு ஓரமாக காவி வேட்டி துண்டுடன் ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார்.

சாமியாரா, பிச்சைக்காரரா என்று அனுமானிக்க முடியாத இடைப்பட்ட தோற்றம். மூவரையும் அவரும் பார்த்தார். வள்ளுவர் அவரிடம் பேசத் தொடங்கினார்.‘‘வணக்கம்... சாமிகிட்ட சில விஷயங்கள் பேசலாமா?’’‘‘என்கிட்டயா?’’
‘‘ஆமாம்...’’

‘‘நீங்க என்ன அந்த அபிஷேகம் பண்ண வந்திருக்கறவங்களா?’’‘‘அபிஷேகமா?’’‘‘ஆமாம்... நம்ம கோயில் காவக்கார சாமியான கால பைரவருக்கு அபிஷேகத்துக்குக் கொடுத்தது நீங்கதானே?’’‘‘ஓ.. இந்தக் கோயில் காவல் தெய்வம்  கால பைரவரா?’’ - வள்ளுவர் கேட்ட விதமே அவருக்கு பதிலாகி விட்டது.

அவர் முகத்திலும் மாற்றம்.‘‘அந்த சந்நதி எங்க இருக்கு?’’  என்று கேட்டான் வர்ஷன். மௌனமாக திசையைக் காட்டினார் அந்த மனிதர்! சந்நதி தனியே தெற்கு நோக்கி பார்த்தபடி இருந்தது. சந்நதி முகப்பில் நல்ல கூட்டம். அன்று அஷ்டமி நாள், செவ்வாய்க்கிழமை வேறு!

வர்ஷன் வள்ளுவரைப் பார்க்க, வள்ளுவர் ஏட்டை எடுத்து படிக்கச் சொன்னார்! வர்ஷனும் தயாரானான். ஏட்டின் பக்கத்தில் எழுத்துகள் தெளிவாகவே தெரிந்தன!‘காவல் தெய்வம் நோக்கும் பக்கம்நாவல் மரத்தின் நிழலில் இருக்கும்சேவல் கொடியோன் உடனுறை தரிக்கும்கோவில் மந்திரம் மற்றது உரைக்கும்!’- என்று அந்தப் பக்கத்தில் வரிகள்.

வள்ளுவர் உடனே பொருள் கூறத் தொடங்கினார்.‘‘காவல் தெய்வம் நோக்கும் பக்கம்னா, இந்த கால பைரவர் பார்க்கும் பக்கம்னு அர்த்தம். அதாவது தென்திசை!  அந்த தென்திசையில் நாவல் மரத்துக்குக் கீழ இருக்கிற ‘சேவல் கொடியோன் உடனுறை தரிக்கும்’னா முருகனோட உடன் பிறந்தவர் இருக்கற இடம்னு ஒரு பொருள் உண்டு. அப்படின்னா அது விநாயகராதான் இருக்கணும். அந்த விநாயகருக்கான மந்திரமானது நமக்கு அடுத்தடுத்து சொல்ல வேண்டியதை சொல்லிடும்னு பொருள்’’ என்றார்.

‘‘அப்ப நாம் ெதன்திசைநோக்கி போறோம்.  அதாவது பிள்ளையாரைப் பார்க்க...’’ என்று அவர் விளக்கத்தை ரத்தினச் சுருக்கமாகக் கூறினான் வர்ஷன். சொன்னதுபோலவே புறப்படவும் முடிவு செய்தனர். முன்னதாக ஆதிசொக்கநாதரையும் விஜயாம்பிகையையும் தரிசிக்க அவர்கள் தயாராயினர்.‘‘அய்யா! என்ன இது... இப்படியே ஒவ்ெவாரு கோயிலுக்கும் போய்க்கிட்டே இருக்க வேண்டியிருக்கே?’’

 என அயர்ச்சியோடு சொன்னாள் ப்ரியா.‘‘என்ன... சோர்வா இருக்காம்மா?’’ என்ற வள்ளுவர், ‘‘பிள்ளையாரைத் தொட்டுத் தொடங்கற காரியம் நிச்சயம் நல்லவிதமா முடியும்மா. சொல்லப் போனா நம்ம பயணம் அங்கதான் உண்மையில தொடங்குது. அது மட்டுமில்ல... நாம இப்ப காலப்பலகணியை தேடற நோக்கத்துக்கும் அங்க நமக்கு விடை கிடைக்கலாம்’’ என்றார்.

வர்ஷனும் ஆமோதித்தான். பின் ஆதிசொக்கநாதரையும் விஜயாம்பிகையையும் தரிசித்தனர். திரும்பப் புறப்பட்டனர்.அவர்கள் தேடிய நாவல் மரத்தடி பிள்ளையாரும் நாவலூர் என்ற ஊரில்  அறுபதாவது கிலோ மீட்டரிலேயே கிடைத்துவிட்டார். ஆனால் ஊர்முகப்பில் ஒரு மருத்துவ முகாம். காரில் வந்த மூவரையும் இறங்கச் சொல்லி, ஊருக்குள் போகும் முன் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளச் சொன்னார்கள்.‘‘எதுக்கு?’’

‘‘எபோலா வைரஸ் மாதிரி ஒரு கிருமி பரவினதுல இங்க நாவலூர்ல மட்டும் இதுவரை எண்பது பேர் இறந்துட்டாங்க...  கிருமியும் வேகமா பரவிக்கிட்டு இருக்கு. இதுல இருந்து பிழைச்சாலும்  புண்ணியமில்லை. காது கேட்காம போயிடுது...’’ என்றார் டாக்டர் ஒருவர்.
பகீரென்றது மூவருக்கும்..!

 தீபாவளி டிரஸ் எடுத்தாச்சான்னு
கேட்ட துக்கு தலைவர் கடுப்பாயிட்டாரா... ஏன்?’’
‘‘நான் அப்படிக் கேட்டப்ப
தலைவர் ஜெயில்ல இருந்தாரு!’’

தலைவர் வீட்டுக்கு தீபாவளிக்கு வர்ற அவரோட மாப்பிள்ளைங்க மட்டும் தீபாவளி முடிஞ்சதும் உடனே கிளம்பிடறாங்களே... எப்படி?’’
‘‘அவங்க கிளம்பலைன்னா, தலைவர் மைக் எடுத்து பேச ஆரம்பிச்சிடு
வாரே!”

இது வாட்ஸ்அப் வெடியா... அப்படி என்ன விசேஷம் இதுல?’’
‘‘காலையில வெடிக்க ஆரம்பிச்சீங்கன்னா, நேரம் போறதே தெரியாம நைட் வரைக்கும் வெடிச்சிக்கிட்டே இருப்பீங்க சார்!

அது என்ன புதுசா பிரதமர் வெடி?’’
‘‘பத்த வைக்கவே வேணாம்! பக்கத்துல போய் ஏதாவது ஒரு வெளிநாட்டோட பேர் சொன்னா போதும்... வெடிச்சிடும்!

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்