ஜோக்ஸ்



‘‘ஏங்க... இந்த ஸ்வீட்டைக் கொண்டு போய் நேத்து என்கூட சண்டை போட்டாளே பக்கத்து வீட்டு விமலா... அவளுக்குக் கொடுத்துட்டு வாங்க!’’
‘‘அவதான் சண்டையை மறந்து அப்போவே சமாதானம் ஆகிட்டாளே... இன்னும் நீ ஏன் அவமேல கோபமா இருக்கே சுதா?’’

‘‘ஆ ச்சரியமா இருக்கு... உன் மனைவி தீபாவளிக்கு புடவை எடுக்கப் போனவங்க ஒரு மணி நேரத்துலயே எடுத்துட்டு
வந்துட்டாங்களா?’’‘‘வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க... அவ போன தீபாவளிக்கு புடவை எடுக்கப் போனவ!’’

 ‘‘எதுக்குடி பையனைப் போட்டு இப்படி அடிக்கறே?’’
‘‘தீபாவளிக்கு நான் செஞ்ச ஸ்வீட்டை கொடுத்தா ‘ஆபத்து இல்லாத தீபாவளி கொண்டாடச் சொல்லி இருக்காங்க... எனக்கு வேணாம்’னு சொல்றான்ங்க!’’

‘‘உங்களுக்கு பட்டாசு வெடிக்க பயமா இருக்கலாம்... அதுக்காக தூரமா இருந்து வெடிக்கற மாதிரி ரிமோட் இருக்கான்னு கேக்கறது எல்லாம் ஓவர்ங்க!’’

‘‘த லைவர் கொண்டாடும் முதல் தீபாவளி இதுதான்!’’‘‘ஏன்?’’‘‘எந்த ஜெயில்ல பட்டாசு, மத்தாப்பு எல்லாம் கொளுத்தி தீபாவளி கொண்டாட
அனுமதிக்கிறாங்க?’’

எவ்வளவுதான் நல்லா வண்டி ஓட்டற டிரைவரா இருந்தாலும், தீபாவளிக்கு சங்கு சக்கரம்தான் கொளுத்த முடியுமே தவிர, பஸ் சக்கரமோ, லாரி சக்கரமோ, இல்லை... கார் சக்கரமோ கொளுத்த முடியாது!- தீபாவளிக்கு சங்கு சக்கரம் மட்டும் கொளுத்தும் டிரைவர்கள் சங்கம்

 கே.ஆனந்தன், தர்மபுரி.

என்னதான் ஒருத்தர் அடுத்தவங்க வம்பு தும்புக்கு போகாத நல்லவரா இருந்தாலும், தீபாவளி பட்டாசு வெடிக்கணும்னா பத்த வச்சுதான்
ஆகணும்!- அடுத்தவர்களின் வம்பு தும்புக்கு போகாத ‘ரொம்ப’ நல்லவர்கள் சங்கம்