பாலிவுட் புது பியூட்டிஸ்!



நம்மைப் போல் புதுசா இளசா ரசிப்பதெல்லாம் வடநாட்டில் கிடையாது போல. தீபிகா படுகோனே, கேத்ரினா கைஃப், கங்கனா ரணாவத், கரீனா கபூர், ப்ரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா என பாலிவுட் மார்க்கெட் இப்பவும் கொஞ்சம் சீனியர் நடிகைகள் கையில்தான். இவர்களுக்கு இடையே பூத்திருக்கும் பனித்துளி காயாத பட்டு ரோஸ்களில் ஒரு டாப் 5...

அலியா பட்

22 வயதுதான். அதற்குள் ‘அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகை’களில் அலியாவுக்கு மூன்றாம் இடம். ‘ஹைவே’, ‘2 ஸ்டேட்ஸ்’ என இரண்டே படங்களில் பாலிவுட் ரசிகர்களை பாயைப் பிறாண்ட வைத்தவர். அடுத்து நடித்த ‘ஹம்டி ஷர்மா கி துல்கன்யா’, அலியாவுக்காகவே ஓடியது. இந்த வருடம் அலியா நடித்த ‘ஷாந்தார்’ அவ்வளவாகப் போகவில்லை. என்றாலும் அடுத்த வருடம் அடித்து விளாச மூன்று படங்கள் வரிசையில்!

பரிணீதி சோப்ரா

நம்மைப் பொறுத்தவரை மாம்பழ விளம்பரப் பொண்ணு. ப்ரியங்கா சோப்ராவின் கஸின். முதல் படமான ‘லேடீஸ் Vs ரிக்கி பாலி’ல் இருந்தே அவார்டுகளால் அர்ச்சிக்கப்பட்டவர். போன வருடம் மூன்றுக்கு இரண்டு படங்கள் ஹிட். இந்த வருடம் பெண்ணியம் அது இதுவென சமூகக் கருத்துகள் சொல்லப் போய்விட்டார். அடுத்த வருடம் ஆல் இஸ் வெல்!

கீர்த்தி சனன்

போன வருடம்தான் நடிக்க வந்தார் கீர்த்தி. அதுவும் முதல் படம் தெலுங்கு. அந்த வருடமே ஹிந்தியில் அவர் நடித்த ‘ஹீரோபன்டி’ செம ஹிட். இந்த வருடமும் அதே
பாணியில் நாக சைதன்யாவுடன் ஒரு தெலுங்கு ஹிட் கொடுத்துவிட்டு, ஹிந்தியில் ‘தில்வாலே’ பண்ணியிருக்கிறார். இதே
ஸ்பீடில் போனால் டோலிவுட், பாலிவுட் இரண்டும் இவருக்கு மகுடம் சூட்டும்!

ஷ்ரத்தா கபூர்

வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள். 2013ல் வந்த ‘ஆஷிக்கி 2’ படத்தில் இளசுகளை ஈர்த்தவர். தொடர்ந்து, ‘ஏக் வில்லன்’, ‘ஹைதர்’, நம்ம பிரபுதேவாவின் ‘ஏ.பி.சி.டி 2’ என ஹிட்டுகள் ஷ்ரத்தாவை உச்சத்துக்கே கொண்டு போய்விட்டன. இப்போதைக்கு அதிக சம்பளம் வாங்குவதில் இவருக்கு ஐந்தாம் இடம். திருத்தமான முகமும் அதற்குப் பொருத்தமான உடலும்... இந்தப் பொண்ணுக்கு சீக்கிரமே முதலிடம் கன்ஃபார்ம்!

ரிச்சா சட்டா

பஞ்சாப்பில் பிறந்து டெல்லியில் வளர்ந்த பொண்ணு. சூப்பர் ஹிட் சீரிஸ் ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ இரண்டு பாகங்களிலும் இதயம் ஈர்த்தவர். 2012 தொடங்கி வருடத்துக்கு மூன்று படம் வந்துவிடுகிறது ரிச்சாவுக்கு. இந்த வருடத்தில் இனிமேல் ரிலீசாக இரண்டு படங்கள் காத்திருக்க அடுத்த வருட லிஸ்ட்டும் நீள்கிறது. ஆக, சீக்கிரமே பாலிவுட் வட்டாரத்தில் ரிச்சா பேச்சா இருக்கும் என்கிறார்கள்.

- ரெமோ