பொறியியலில் மேற்படிப்பு படிக்கணுமா?



GATE  தேர்வுக்கு தயாராகுங்க!

Indian Institute of  Technology  (IIT), Indian Institute of Sciences  (IISc) உள்ளிட்ட   இந்தியா முழுதுமுள்ள சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் முதுகலை படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேர்வே   GATE  (Graduate Aptitude Test in Engineering) எனப்படும் பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இத்தேர்வு பற்றியும், இதற்கு விண்ணப்பிக்கும் முறை பற்றியும், தேர்வை எதிர்கொள்ளும் விதம் பற்றி யும் விளக்குகிறார் கல்வியாளரும் ‘ஸ்டூடன்ட் விஷன் அகாடமி’யின் இயக்குனருமான ஆர்.ராஜராஜன்.

நிகிஜிணி தேர்வு பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பிரதான தேர்வு. இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களையே தகுதியாகக் கொண்டு இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கூட GATE தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வை இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,

மும்பை, டெல்லி, கவுகாத்தி, கரக்பூர், சென்னை, ரூர்க்கி, கான்பூர் ஆகிய ஏழு இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. எம்.இ, எம்.டெக், பிஹெச்.டி போன்ற படிப்புகளில் சேர மட்டுமின்றி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், இந்துஸ்தான் பெட்ரோலியம்,

 தெர்மல் பவர் கார்ப்பரேஷன் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறவும் இந்தத் தேர்வு பயன்படுகிறது. மேலும் இத்தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள், மத்திய மனிதவளத்துறை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் வழங்கும் கல்வி உதவித்தொகைகளையும் பெறமுடியும். GATE தேர்வை யாரெல்லாம் எழுதலாம்?

*  B.E., B.Tech., B. Arch., B. Pharm   தேர்ச்சி பெற்றவர்கள், இப்படிப்புகளில் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள்.
* 4 வருட   B.S. (Bachelor of Science)   தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள்.
* அறிவியல், கணிதம், புள்ளியியல், கணினி பாடங்களில் M.Sc., M.A., MCA அல்லது இவற்றிற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள்.
*  ஒருங்கிணைந்த ME, M.Tech  படித்து தேர்ச்சி பெற்றவர்கள், இப்படிப்புகளில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள்.
* டியூவல் டிகிரி (Dual degree) படித்து தேர்ச்சி

பெற்றவர்கள், ஒருங்கிணைந்த (BS)MS படித்துத் தேர்ச்சி பெற்றவர்களும், AMIE (Associate Member of The Institution of Engineers), AMICE (Degree in Civil Engineering Associate Membership) தேர்ச்சி பெற்றவர்களும் GATE தேர்வை எழுதலாம்.
தேர்வு எந்த அடிப்படையில் நடக்கும்?

GATE தேர்வு பற்றிய விவரங்கள்:


*ஏரோ ஸ்பேஸ் எஞ்சினியரிங் 
*அக்ரிகல்ச்சர் எஞ்சினியரிங்
*ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங்
*பயோ டெக்னாலஜி
*சிவில்
*கெமிக்கல்
*கம்ப்யூட்டர் சயின்ஸ்
*இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி
*கெமிஸ்ட்ரி
*எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங்
*எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்
*ஈகாலஜி அண்ட் எவல்யூஷன்
*ஜியாலஜி அண்ட் ஜியோ பிசிக்ஸ்
*இன்ஸ்ட்ருமென்டேஷன் எஞ்சினியரிங்
* கணிதம்
* மெக்கானிக்கல் எஞ்சினியரிங்
* மைனிங் எஞ்சினியரிங்
* மெட்டலர்ஜிக்கல்
* இயற்பியல்
* புரொடக்ஷன் அண்ட் இண்டஸ்ட்ரியல்எஞ்சினியரிங்
*டெக்ஸ்டைல் எஞ்சினியரிங்
* ஃபைபர் சயின்ஸ்
*எஞ்சினியரிங் சயின்ஸ்
*லைஃப் சயின்ஸ்

ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். தேர்வு செய்யும் பாடத்துக்கு ஏற்றவாறு கட்டாயத் தாள்கள் உண்டு. எந்தப் பாடத்தை தேர்வு செய்து கொண்டாலும், அந்தப் பாடங்களில் உள்ள வினாக்களைத் தவிர, மொழி மற்றும் அனாலிடிகல் திறமைகள் அடங்கிய பொது நுண்ணறிவுத்திறன் தொடர்பான வினாக்களும் இருக்கும். 100 மதிப்பெண்களுக்கான தேர்வு. மொத்தம் 65 வினாக்கள் கேட்கப்படும்.

50 வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திலிருந்தும், 15 வினாக்கள் நுண்ணறிவு சார்ந்தும் இருக்கும். ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடைபெறும். சில வினாக்களுக்கு எண்கள் வாயிலாக விடை தர வேண்டி இருப்பதால்   Virtual Key Board   வழங்கப்படும்.

இவ்வகை வினாக்களுக்கு, தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்பட மாட்டாது. மற்ற வினாக்கள் சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் இருக்கும். இப்பிரிவில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும். மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். நிகிஜிணி தேர்வில் ஒரு மாணவர் பெறும் தேர்ச்சியும் மதிப்பெண்ணும் தேர்வு முடிவு வெளியான நாளிலிருந்து, மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

பொதுவாக, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் பொறியியல் மேற்படிப்பிற்கு GATE மதிப்பெண்களைக் கொண்டு சேர்த்துக் கொண்டாலும், சில கல்வி நிறுவனங்கள் நேர்முகத் தேர்வையும் நடத்துகின்றன. இத்தகைய நிறுவனங்கள் நிகிஜிணி தேர்விலிருந்து 70% மதிப்பெண்களையும், நேர்முகத்தேர்வு மற்றும் அடிப்படைக் கல்வித் தகுதியிலிருந்து 30% மதிப்பெண்களையும் கருத்தில் எடுத்துக் கொள்கின்றன.
வினாத்தாள் அமைப்பு

*  ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்களுக்கான பகுதியில்  சரியான விடையைத் தேர்வு செய்யும் வினாக்களும், எண் வழியாக விடை தரும் வினாக்களும் இருக்கும். கோட்பாடுகள், பாடம் சார்ந்த கருத்துக்கள், சூத்திரங்கள், விதிகள் சார்ந்த அறிவை சோதிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்படும்.
* Comprehension பிரிவில் மாணவர்களின் புரிதல் மற்றும் முடிவெடுக்கும் திறனை சோதிக்கும் முறையில் கேள்விகள் அமையும்.
*  Application பிரிவில் கணக்கீடு செய்யும் முறை மற்றும் லாஜிக்கல் ரீசனிங் அறிவை சோதிக்கும் முறையில் கேள்விகள் அமையும்.
*Analysis and Synthesis  பிரிவில் விபரங்கள், படங்கள், ஒப்பிட்டுப் பார்த்தல், உத்தேசித்து விடை தருதல் முறையில் வினாக்கள் அமையும்.
விண்ணப்பிப்பது எப்படி?

http://gate.iitk.ac.in/GATE2015  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்  ஆண்களுக்கு 1,500 ரூபாய். பெண்கள், ஷிசி/ஷிஜி/ மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 750 ரூபாய். இக்கட்டணத்தை SBI,  AXIS Bank வழியாக செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கில், மீ  செலான் வழியாக இணையதளத்திலும் கட்டலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் 1.10.2014 புதன்கிழமை. 17.12.2014 அன்று தேர்வுக்கான அனுமதி அட்டை வழங்கப்படும். ஜனவரி 31, பிப்ரவரி 1, 7, 8, 14  ஆகிய நாட்களில் தமிழகத்தில் இந்த தேர்வு நடைபெறும். காலைத் தேர்வு 9 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் தேர்வு 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும்.

தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் 12.3.2015 அன்று வெளியிடப்படும். சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர், திருச்செங்கோடு, திருவண்ணாமலை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

* இத்தேர்வில் தேர்ச்சி பெற கடும் உழைப்பு அவசியம். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் நிறைய உதவித்தொகைகளைப் பெற முடியும். நல்ல கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும். பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

* தேர்வுக்கு நிறைய முன்தயாரிப்பு அவசியம். மேலுள்ள இணையதளத்தில் மாதிரி கேள்வித்தாள்கள், பாடத்திட்டங்கள் அனைத்தும் கிடைக்கின்றன. கேட் தேர்வு பயிற்சிக்கு மாதிரித் தேர்வுகளை எழுதுவது, மிக முக்கியமான ஒரு அம்சம். எனவே, வாரத்திற்கு இருமுறை, மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்ப்பது முக்கியம். அப்போதுதான், அனைத்து பகுதிகளிலும் பயிற்சி கிடைக்கும்.

* இத்தேர்வை கடமைக்காக எழுதுதல் கூடாது. ஒவ்வொரு தேர்வு முடிவிலும், நீங்கள் எந்தப் பிரிவில் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கிறீர்கள், அடுத்து உங்களின் நடவடிக்கை என்ன என்பதை திட்டமிட வேண்டும். பலவீனமான பகுதிகளை நன்கு படித்து, உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

* நேரத்தை பிரித்து வைத்துக்கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனம். அதேசமயம், கேட் தேர்வானது வெறும் வேகம் சம்பந்தமானது மட்டுமல்ல. நுணுக்கம் என்பது மிகவும் முக்கியம். நீங்கள், ஒரு கேள்விக்கு விடையளிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைவிட, அதற்கு எந்தளவு மிகச் சரியாக விடையளித்து இருக்கிறீர்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

 வெ.நீலகண்டன்