கடல்சார் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு CET-2019



இந்திய அரசின் கப்பல் வணிகத்துறை அமைச்சகத்தின் (Ministry of Shipping, Government of India) சார்பு அமைப்பாக நிறுவப்பட்டது (Indian Maritime University) இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம். இதில் இடம்பெற்றிருக்கும் கடல்சார் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுகள்(CET-2019) குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பல்கலைக்கழக வளாகங்கள்


சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உத்தண்டியைத் தலைமை யகமாகக் கொண்டு இயங்கும் இப் பல்கலைக்கழகத்திற்கு கொல்கத்தா, மும்பை, சென்னை, விசாகப்பட்டினம், கொச்சின் ஆகிய ஐந்து இடங்களில்  வளாகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வளாகங்களில் பல்வேறு கடல்சார் இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புகளுடன் சில பட்டயப்படிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.   

டிரெயினிங் ஷிப் சாணக்கியா, லால் பகதூர் சாஸ்திரி காலேஜ் ஆப் அட்வான்ஸ்டு மெரி டைம் ஸ்டடிஸ் அண்ட் ரிசர்ச், மெரைன் எஞ்சினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்ற மூன்று நிறுவனங்கள் மும்பை வளாகத்திலும், மெரைன் எஞ்சினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் போர்ட் மேனேஜ்மென்ட் என்ற இரண்டு நிறுவனங்கள் கொல்கத்தா வளாகத்திலும், நேஷனல் ஷிப் டிசைன் அண்ட் ரிசர்ச் சென்டர் விசாகப்பட்டினத்திலும், நேஷனல் மெரி டைம் அகாடமி விசாகப்பட்டினம் மற்றும் சென்னையிலும் உள்ளன.

IMU  வழங்கும் படிப்புகள் இளநிலைப் பட்டப்படிப்புகள்

முதுநிலைப் பட்டயப்படிப்பு: மும்பை போர்ட்டில் ஓர் ஆண்டுகால மெரைன் எஞ்சினியரிங் பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இதில் Ph.D & MS போன்ற ஆய்வு படிப்புகளும் உள்ளன. பொது நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டம் இளநிலைப் படிப்புகளுக்கு (B.B.A. நீங்கலாக) +2 அடிப்படையில், ஆங்கிலம், பொது நுண்ணறிவு, இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் அடிப்படையில் 200 கொள்குறி வினாக்கள் கேட்கப்படும்.

M.B.A; M.Sc. படிப்புகளுக்கு குவான்டிடேடிவ் எபிலிட்டி, டேட்டா இன்டர்பிரெட்டேஷன், வெர்பல் எபிலிட்டி, லாஜிக்கல் ரீசனிங் ஆகிய பாடங்கள் அடிப்படையில் 120 கொள்குறி வினாக்கள் கேட்கப்படும்.

M.Tech படிப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம், மெக்கானிக்கல், நேவல் ஆர்க்கிடெக்சர், மெரைன், சிவில் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் 120 கொள்குறி வினாக்கள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கத் தகுதி

1) B.Sc. நாட்டிக்கல் சயின்ஸ் (3 ஆண்டு): +2 இயற்பியல், கணிதம், வேதியியல் குறைந்தது 60 விழுக்காடு மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு இம்மதிப் பெண்களில் 5 விழுக்காடு சலுகை உண்டு. இது ஆங்கிலத்திற்கு பொருந்தாது.

2) டிப்ளமோ நாட்டிக்கல் சயின்ஸ் (ஓர் ஆண்டு): +2 இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
B.Sc. படிக்க எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல் உள்ளடக்கிய படிப்பில் குறைந்தது 60 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி. BE/B.Tech IIT-யில் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்லூரியில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு இந்த மதிப்பெண்களில் 5 விழுக்காடு சலுகை உண்டு. அனைவரும் ஆங்கிலத்தில் பத்தாம் வகுப்பு அல்லது +2ல் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

3)நேவல் ஆர்க்கிடெக்சர், ஓஷன் எஞ்சினியரிங் : B.Tech (மெரைன் எஞ்சினி யரிங்) (4 ஆண்டுகள்): +2 இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 60 விழுக்காடு மதிப்பெண்களும், பத்தாம் வகுப்பு அல்லது  +2ல் ஆங்கிலத்தில் குறைந் தது 50 விழுக்காடும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அனைத்து இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் 1.8.2019 அன்று 17 வயதுக்குக் குறையாமலும், 25 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் பொது நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.imu.edu.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர், பிற்படுத்தப் பட்டவர் நான்கிரிமிலேயர் ரு.1000, ஆதி திராவிடர், பழங்குடியினர் ரு.700 செலுத்த வேண்டும். ஆய்வுப் படிப்புகளுக்கு பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர் நான்கிரிமிலேயர் ரு.1500, ஆதிதிராவிடர், பழங்குடியினர் ரு.1000 செலுத்த வேண்டும். இரண்டு கட்டமான ஆன்லைன் பதிவில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 5.5.2019. சான்றிதழ்களை பதிவேற்றி விண்ணப்பிக்க கடைசி நாள் 8.5.2019.

பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள் அனைவரும் நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை (Hall Ticket) 15.5.2019 முதல் மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் உட்பட இந்தியா முழுவதும் 36 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களில் இணைய வழியிலான பொது நுழைவுத்தேர்வு 1.6.2019 அன்று நடைபெறும். தேர்வு முடிவுகள் 6.6.2019 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் முழு விவரங்களை அறிய http://www.imu.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- முனைவர் ஆர்.ராஜராஜன்