+2 முடித்தவர்கள் விமானி ஆகலாம்!



* வாய்ப்பு

இந்திராகாந்தி ராஷ்டிரிய உரான் அகாடமி (IGRUA) என்பது 1985ம் ஆண்டு  உத்திரப்பிரதேசத்தின் அமேதியில் தொடங்கப்பட்ட விமானப் பயிற்சி நிறுவனமாகும். இந்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டுவரும் நிறுவனமாகும்.

இங்கு சர்வதேச தரத்திலான விமான போக்குவரத்து சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. ஆப்கானிஸ்தான், நேபாள், ஜாம்பியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்திய விமானப் படை, கடற்படை வீரர்களும் மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்களும் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றுவருகின்றனர். இக்கல்விநிறுவனத்தில் 2019ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வழங்கப்படும் படிப்புகள்:

இரண்டு வருட கால அளவிலான பைலட் (Ab-initio (Commercial pilot licence course)) கோர்ஸ் மற்றும் மூன்று வருட கால அளவிலான B.Sc., Aviation இளங்கலைப் பட்டம் போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. கல்வித் தகுதி: இரண்டு வருட பைலட் கோர்ஸை தேர்ந்தெடுக்க விரும்பும்  மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இயற்பியல், கணிதம் போன்ற முதன்மைப் பாடங்களில் பொதுப் பிரிவினர் 55% மதிப்பெண்களும், எஸ்.சி / எஸ்.டி மாணவர்கள் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பைலட் கோர்ஸ் முடித்தவர்களுக்காகவே பிரத்யேகமான பி.எஸ்சி., ஏவியேஷன் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் பைலட் ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.igrua.gov.in என்ற இணையதளம் சென்று பொதுப்பிரிவினர் ரூ.10,000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2019.

மேலும் அதிக விவரங்களுக்கு www.igrua.gov.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்.