டியர் டாக்டர்



* மருத்துவ குணமிக்க துளசி பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ‘ஸ்டீவியா’ என்ற சீனி துளசி பற்றி ‘குங்குமம் டாக்டர்’ வாயிலாக முதன்முதலாக அறிந்துகொண்டேன். சீனி துளசியின் மருத்துவ குணங்கள் மலைக்க வைத்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* நித்ய கல்யாணி, ஆவாரை, சீனி துளசி என மூன்று வகை மருத்துவ தாவரங்களைப்பற்றிய அரிய தகவல்கள் தந்து அசத்தி
யிருந்தது குங்குமம் டாக்டர். ‘பேகன் டயட்’ என்ற புதிய உணவுமுறை மீது புது நம்பிக்கை வந்துவிட்டது.
- சுகந்தி நாராயண், வியாசர் காலனி.

* 40 வயது வரை திருமணத்தை தள்ளிப்போடும் இன்றைய இளைஞர்களின் மனநிலையை அப்படியே படம் போட்டு விளக்கியிருந்தது ‘என்னது கல்யாணமா’ கட்டுரை. கூடவே, ‘எங்கு சுற்றினாலும் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அன்பைப் பகிர்ந்து கொள்வது குடும்ப உறவாக மட்டுமே இருக்க முடியும்’ என்று அறிவுரை சொல்லியிருந்த விதம் பெற்றோரின் கவலையை குறைப்பதாய் இருந்தது.
- சி. கிருஷ்ணன், குனியமுத்தூர், கோவை.

* ‘ட்ரக்கியாஸ்டமி’ என்ற பெயர் மட்டும் அடிக்கடி ஊடகங்களில் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தோம். டாக்டர் அரவிந்த் பேட்டியைப் படித்து, அந்தச் சிகிச்சைமுறை பற்றி தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது.
- எல்ஜின் ஜோசப், செங்குன்றம்.

* அலோபதி, சித்தா, ஆயுர்வேதா என்று எல்லா மருத்துவ முறைகள் பற்றியும் விரிவான தகவல்கள் வெளியிடுவது குங்குமம் டாக்டர் மட்டும்தான். அதேபோல் உணவு, உடற்பயிற்சி, புதிய ஆராய்ச்சிகள், நாட்டு நடப்பு என்று பல்வேறு மாறுபட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் சுவாரஸ்யமான இதழும் குங்குமம் டாக்டர்தான் என்பதில் அதன் வாசகனாக பெருமை கொள்கிறேன்.
- காசி, வள்ளியூர்.

* மனித உடலின் தலைமைச் செயலகமான தலையில் அடிபட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரை வழங்கியிருந்தீர்கள். சாதாரணமாக பைக்கில் இருந்து விழுவது போன்ற விஷயங்களுக்கு பயம் கொள்ள வேண்டியதில்லை என்ற தகவல் ஆறுதல் தந்தது.
- அப்துல்லா, வாணியம்பாடி.