முத்தாரம் லைப்ரரி!




The Night Diary
by Veera Hiranandani
272 pages
Dial Books
1947 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது. உடனே பாகிஸ்தான், இந்தியா பிரிவினைக்கான குரல்கள் எழ நாடே கலவரத்தால் ஸ்தம்பித்துப்போகிறது.  இதில் பாதிக்கப்பட்ட பனிரெண்டு வயது நிஷாவின் குடும்பம் வாழ்வதற்கான புதிய நிலம் தேடி பயணிக்கின்றனர். பயணத்தில் நேர்ந்த அனுபவங்
களும், அவர்களின் எதிர்காலமும்தான் கதையின் மையம்.
   
The Last Grand Adventure
by Rebecca Behrens
336 pages
Aladdin
பனிரெண்டு வயது பியா தன் பாட்டியுடன் அவரது காணாமல் போன அக்காவை தேடிச்செல்லும் பயணம்தான் கதை. பியாவின் தாயும், தந்தையும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் சூழ்நிலையில் பாட்டியுடன் வாழும் பியாவுக்கு அட்வென்ச்சர் ஆர்வம் அதிகம். பாட்டி  பிட்ஜேயின் சகோதரியை தேடிச்செல்லும் பயணத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆச் சரியகரமான உண்மைகள் வாசகர்களையும் உற்சாகப்படுத்துகின்றன.