பிரான்சின் இஸ்லாமோபோபியா!



பிரான்ஸ் சேனலில் நடைபெற்ற டேலன்ட் வகையறா நிகழ்ச்சியில் மினெல் இப்டிசம் பாடிய லியோனல் கோகனின் Hallelujah  என்ற பாடல் நிகழ்ச்சியின்  நடுவர்களை நெகிழ்ச்சியாக்க, கரகோஷங்கள் குவிந்தன. 

ஆனால் சமூகவலைத் தளத்தில் அவரின் கணக்குகளை தேடி எடுத்து தன் இருபதுகளில் பிரான்சில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த அவரின் பதிவு களை மீண்டும் பதிவிட, உடனே மக்கள் மினெலை நிகழ்ச்சியைவிட்டு நீக்கச்சொல்லி வற்புறுத்த, மினெல் அந்நிகழ்ச்சியிலிருந்து தானாகவே விலகிவிட்டார்.   

மினெல் இஸ்லாம் பெண் என்பதோடு தலையில் அணிந்திருந்த ஹைஜப் என்ற இஸ்லாமிய உடையும் எதிர்ப்புக்கு முக்கியக் காரணம். 1989 ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாமியர்களின் உடைமீதான காழ்ப்பு பிரான்சில் உள்ளது. பாரிசின் க்ரெய்லிலுள்ள மூன்று சிறுமிகள் தலை
மீதான உடையை அகற்ற மறுத்ததாக பள்ளியைவிட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

மாநில கவுன்சில் உடையை அணிய அனுமதித்தாலும், கல்வி அமைச்சர் லியோனல் ஜோஸ்பின் இது மாணவர்களுக்குத்தான், மக்களுக்கல்ல என்று கூறினார். மெல்ல இஸ்லாமியர்களாக வாழ்வதே பிரான்சில் தவறு என்னுமளவுக்கு இனவெறுப்பு அங்கு தீவிரமாகிவருகிறது.