பாப்-அப் கேமரா போன்



தினந்தோறும் புதிதாக ஒரு கேட்ஜெட் சந்தையில் அறிமுகமானாலும் ஏதோவொரு கேட்ஜெட் மட்டுமே பரவலாக எல்லோருடைய கவனத்தையும் பெறுகிறது. அப்படியான ஒரு கேட்ஜெட்தான் ‘சாம்சங்’ நிறுவனத்தின் புதிய மாடலான கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட் போன். ‘‘இதுவரைக்கும் வெளியாகியிருக்கும் ‘சாம்சங்’ போன்களிலேயே தனித்துவமானது இதுதான்...’’ என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

48 எம்பி திறன் கொண்ட கேமராவில் செல்ஃபி எடுக்க வேண்டும் என்பது செல்ஃபி பிரியர்களின் பெருங்கனவு. அதை நிறைவேற்றுகிறது இந்த போன். 48 எம்பி மற்றும் 8 எம்பி திறன்கொண்ட மூன்று பின் கேமராக்கள். பாப்- அப் வசதி இருப்பதால் 48 எம்பி கேமராவை முன்புறமாகத் திருப்பி துல்லியமான செல்ஃபியை எடுக்கலாம். பாப்-அப் கேமரா வசதியுடன்  வெளியாகியிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுவே.

தவிர, ‘Snapdragon 730G chipset’ என்ற இயங்கு தளம் இந்தப் போனில் தான் முதல் முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு நேரம் போனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாலும் கண்களுக்கு வலி தராத 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி சூப்பர் ‘AMOLED’ டிஸ்பிளே, போனின் வேகத்தை எப்போதும் சமநிலையில் வைத்திருக்கும் 8 ஜிபி ரேம், மனதுக்குப் பிடித்த பாடல்களையும் படங்களையும் சேகரிக்க 128 ஜிபி இன்பில்ட் மெமரி, அத்துடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, சீக்கிரத்தில் சார்ஜ் செய்ய 3,700mAh திறன் கொண்ட பேட்டரி, 1080X2400 பிக்சல் ரெசல்
யூசன். இப்போது தாய்லாந்து சந்தைகளில் இந்த போன் கிடைக்கிறது. மே மாதத்தின் இறுதியில் இந்தியாவில் கிடைக்கும். விலை ரூ.50,500.