தோழியருக்கான நட்சத்திர பலன்கள் மார்ச் 16 முதல் 31 வரைபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்

அஸ்வினி: சொந்த முயற்சியால் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 12ல் இருப்பதால் மனத்தடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். குலதெய்வத்தை வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.

பரணி: இனிய சுபாவம் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பொன் பொருள் சேர்க்கை வரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள், எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். மனக்கவலை நீங்கும்.

கிருத்திகை: காலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நெருக்கடி நிலை விலகும். புதிய முயற்சிகளில் வெற்றி வரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.

ரோகிணி: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.

மிருகசீரிஷம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன்,
மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். கேதுவின் சஞ்சாரம் ஆன்மீகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். சிவபெருமானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.

திருவாதிரை: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பல வகையிலும் நற்பலன்கள் நடக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிணக்குகள் விலகும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் நிலையான எண்ணம் வரும். பண நெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும்.

புனர்பூசம்:  உங்களுக்கு இந்த காலகட்டத்தில் சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வெளிநாடு வாய்ப்புகள் கை கூடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஐந்தாமிடம் பலம் பெறுவதால் பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகம் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். நவக்கிரகத்திற்கு அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும்.

பூசம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் -மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் கிடைக்கும். குபேரனை வணங்க எல்லா நலனும் உண்டாகும்.

ஆயில்யம்:  உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் பிரச்சனை சரியாகும். வீடு மண் மனை யோகம் காணப்படும். வாகனப் ப்ராப்தி கிடைக்கும். கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடக்கும். அன்பும் பாசமும் அதிகரிக்கும். தினமும் கிராம தெய்வத்தை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.

மகம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பண
வரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப்பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

பூரம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண் மனக்கவலை அகலும். எதிர்பாராத செலவு நீங்கும். முயற்சிகளில் தடை விலகும். இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தியான நிலை காணப்படும். குடும்பம் கலகலப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. அரசாங்க காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.

உத்திரம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண் கவலைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும்படியிருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்குழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். ஓய்வில்லாமல் உழைக்க நேரும். ஐயப்பனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்க எல்லா தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.

அஸ்தம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பிரயாணத்தில் தடங்கல் அகலும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியும். எந்த காரியத்தையும் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கணவன்- மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். உத்தியோகத்தில் சிறப்பான பலன் கிடைக்கும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நடராஜருக்கு அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும்.

சித்திரை:  உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் அகன்று நிம்மதி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழல் விலகும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் நற்சுமையாக வரும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

சுவாதி: நீங்கள் இந்த காலகட்டத்தில் சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன் தரும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உங்கள் ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.

விசாகம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மிக நல்ல மாற்றங்கள் வரும். மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தி இருக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் அகலும். உத்தியோகத்தில் கூடுதல் உழைப்பு இருக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

அனுஷம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனதில் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். தட்சிணாமூர்த்தியை வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

கேட்டை: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் வரும். வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. வாராகியை வழிபட்டு வர உடல் ஆரோக்கியமடையும்.

மூலம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். குடும்பம் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். கிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

பூராடம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எடுக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். விநாயகப் பெருமானை வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

உத்திராடம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சரஸ்வதி தேவியை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

திருவோணம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியம் பெறும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். எந்த காரியத்தையும் திறமுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவிர்கள். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். முன்னோர்களை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.

அவிட்டம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பண வசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரம் கடந்து உழைத்து சில பணிகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். மகாலட்சுமியை வழிபட பணக் கஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சதயம்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிகளை செய்வார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். சிவனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும்.

பூரட்டாதி: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிலும் நன்மைகளே நடக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் சென்று வருவீர்கள். எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ராமரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கி நன்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும்.

உத்திரட்டாதி: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.குடும்பத்தில் சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. ஆதிபராசக்தியை வணங்க துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும்.

ரேவதி: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். முருகனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.