காத்துவாக்குல காதலிக்கிறார் விஜய் சேதுபதி!



2015ம் ஆண்டு விஜய்சேதுபதி- நயன்தாரா ஜோடி நடித்து ஹிட்டான படம் ‘நானும் ரவுடிதான்’. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். தற்போது இதே கூட்டணி ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. கூடுதலாக இதில் சமந்தா இணைந்துள்ளார்.
முன்பு இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. இப்போது லலித்குமார் தயாரிக்கிறார். இவர் தற்போது விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தையும், விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

‘‘இரண்டு வருடத்துக்கு முன்பே இந்தக் கதை ரெடியாகிவிட்டது. விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா அனைவரிடமும் கதை சொல்லி ஓ.கே. வாங்கியிருந்தேன். இந்தப் படத்தின் தலைப்பே இது என்ன ஜானர் படம் என்பதை சொல்லிவிடும். இதில் விஜய்சேதுபதி புது கெட்டப்பில் நடிக்கிறார். அதற்காக வெயிட் லூஸ் பண்ணியிருக்கிறார்’’ என்கிறார் விக்னேஷ்சிவன்.

- ரா