திரிந்த பால் அலம்பல் நடிகையின் அலட்டல்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                ‘அந்த மில்க் நடிகை சரசரனு மேல ஏறினா மாதிரி இருக்குல? நிறைய படங்கள்ல நடிக்கிறா மாதிரி ஒரு பிரமைய ஏற்படுத்தி இருக்காங்கல? பார்த்துகிட்டே இருங்க... ஏறின வேகத்துல மடமடனு அதலபாதாளத்துல அவங்க இறங்கலைனா என் பேரை நான் மாத்திக்கறேன்...’

ஒருவரல்ல, இருவரல்ல... ஒட்டுமொத்த திரையுலகை சேர்ந்தவர்களும் அந்த நடிகையை பார்த்து இப்படித்தான் சவால் விடுகிறார்கள்.

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. வந்தாரை வாழ வைக்கும் பண்பு, தமிழர்களுக்கு உண்டுதான். மெல்ல மெல்ல உச்சாணிக்கு செல்லும் நடிகைகளின் கடந்தக் கால வாழ்க்கை குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளாமல், நிகழ்காலத்தில் அவர்கள் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்றுதான் அனைவருமே பார்க்கிறார்கள், கருத்தில் கொள்கிறார்கள்.

ஆனால், ‘பால்’ நடிகையின் விஷயத்தில் சொல்லி வைத்தது போல் அனைவருமே இதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். இதற்கு காரணமும் அந்த மில்க் நடிகையின் நிகழ்கால நடவடிக்கைகள்தான். அதனாலேயே அவரது கடந்த காலத்தைப் பற்றி பேசி, எதிர்காலத்தை அளவிடுகிறார்கள்.

கேரளாதான் அந்த பால் நடிகையின் சொந்த ஊர். ‘கலீஜா’ன தெருவில் ஒண்டுக் குடித்தனத்தில், ஒண்டுக் குடித்தனம். படிப்பு ஏறவுமில்லை; படிக்க வைக்க பணமும் இல்லை. அனைவருமே வேலைக்கு சென்றால்தான் கால் வயிற்று கஞ்சியாவது குடிக்க முடியும் என்ற நிலை. எனவே அந்தக் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் வேலைக்கு சென்றார்கள்.

பார்ப்பதற்கு பால் நடிகை சுமாராக இருப்பார். எனவே, சினிமாவுக்கு அவர் சென்றால், ஓரளவு பணம் கிடைக்கும் என குடும்பத்தினர் தீர்மானித்தார்கள். அதற்கு ஏற்ப, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக மலையாள திரையுலகில் மில்க் நடிகை காலடி எடுத்து வைத்தார். ‘சி’ கிரேட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இலுப்பைப் பூவையே சர்க்கரையாக நினைத்து ‘அந்த’ மாதிரி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழகத்தை சேர்ந்த கலை இயக்குநர் ஒருவருக்கு ஹீரோவாக நடிக்க சான்ஸ் கிடைத்தது. பூஜை போட்ட கையோடு தனது பட்ஜெட்டுக்கு சரிப்பட்டு வந்த பால் நடிகையை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். ‘வீரமான’ அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு பால் நடிகை தன் அம்மாவுடன், லொட லொட அரசாங்க பேருந்தில், அதுவும் தன் சொந்த செலவில் வந்து நடித்துக் கொடுத்தார்.

இதனையடுத்து, ‘மாமனாரின் இன்ப வெறி’ என்ற பொருளில் எழுதப்பட்ட கதையம்சமுள்ள சமவெளி படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதே நேரத்தில்தான் பறவையின் பெயர் கொண்ட அந்தப் படமும் தயாராகி வந்தது. இந்த இரு படங்களில் முதலில் சமவெளி திரையரங்குக்கு வந்தது.

அந்தப் படத்தைப் பார்த்த பறவைப் பட இயக்குநர் அதிர்ந்து விட்டார். தனது படத்தில் பால் நடிகையை அவர் குடும்ப விளக்காக காண்பித்திருந்தார். இதற்கு நேர்மாறாக சமவெளி படத்தில் மாமனாருடன் தன் காமத்தை தணித்துக் கொள்ளும் புரட்சியை பால் நடிகை நிகழ்த்தியிருந்தார்.

நொந்துப் போன பறவை இயக்குநர், தனது பட ஆடியோ வெளியீட்டுக்கு மில்க் நடிகை வரக் கூடாது என உத்தரவு போட்டுவிட்டார்.

ஒருவழியாக பறவை படம் ரிலீசானது. வரலாறு காணாத வெற்றியையும் அப்படம் கண்டது. அவ்வளவுதான்... இந்த வெற்றிக்கு தனது ‘அழகு’தான் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொண்ட அந்த மில்க் நடிகை, புகழ் போதை தலைக்கு ஏற, ஆட ஆரம்பித்து விட்டார்.

இன்றைய தினம் இவரது வழிமுறையே அலாதியானது. எந்தப் படத்தில் நடிக்கிறாரோ, அந்தப் படத்தின் ஹீரோ அல்லது டைரக்டர் அல்லது தயாரிப்பாளரை மயக்கி விடுவார். சொல்லவும் எழுதவும் கூசும் பலான எஸ்.எம்.எஸ்.ஸை தொடர்ந்து அனுப்பி அவர்களுக்கு கிளுகிளுப்பு மூட்டுவார்.

 ‘ஜொள்ளர்களைப்’ போலவே மோனோ ஆக்டிங் செய்து அவர்களை கவிழ்ப்பார். அவ்வப்போது ‘கம்பெனி’யும் கொடுப்பார்.

பிறகென்ன... இந்த மயக்கத்தைப் பயன்படுத்தி 5 நட்சத்திர விடுதியில் சூட், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் காபி, ஃப்ளைட் என்றால் பிசினஸ் சீட்... என புரொடியூசரை மொட்டை அடிப்பார். காலை 7 மணிக்கு கால்ஷீட் என்றால், 10 மணிக்கு ஸ்பாட்டுக்கு வருவது இவரது ஹாபி. எவரும் கேள்வி கேட்க முடியாது. காரணம், அப்படத்தின் முக்கியமான புள்ளியின் பிடி, இவரது கைக்குள். ஆனால், இவையனைத்தும் குறிப்பிட்ட அந்தப் படம் முடியும் வரைதான். அதன் பிறகு, கறிவேப்பிலையைப் போல் அவர்களை கிள்ளி எறிந்துவிட்டு, ஒப்பந்தமான இன்னொரு படத்தின் மையமான இளிச்சவாயனை மயக்க ஆரம்பிப்பார்.

இந்த பேட்டா, அந்த பேட்டா என தில்லுமுல்லு செய்து பணத்தை கறக்கும் இவர், தனது உதவியாளர்களுக்கு மட்டும் ஒழுங்காக சம்பளம் மட்டுமல்ல, பேட்டாவும் தருவதில்லை.

மும்பையிலிருந்து ஹேர் டிரெஸ்ஸர், காஸ்ட்யூம் டிசைனர் என வரவழைத்து தயாரிப்பாளரின் தலையில் மிளகாய் அறைக்கும் இந்த பால்தான், ஒரு காலத்தில் 10 பேர் சீவிய அழுக்குச் சீப்பை கெஞ்சிக் கேட்டு வாங்கி, தன் தலைமுடியை பின்னிக் கொண்டவர்.

பிரபலமான பத்திரிகைகள் மற்றும் சேனல்களுக்கு மட்டுமே பேட்டி அளிப்பேன் என்று இன்று தொடை தட்டுபவர், ஒரு காலத்தில் தன்னைக் குறித்து நாலு வரியாவது எழுதும்படி ஊரிலுள்ள அனைத்து நிருபர்களையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவர்.

இவரது குணம் தெரிந்ததாலோ என்னவோ, எந்த மலையாள நடிகையும் இவருடன் நட்பு வைத்துக் கொள்ளவில்லை. எதையோ குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது தன் குணத்தைதான் காண்பிக்கும் என்பார்களே... அப்படித்தான் இவர் நடந்துக் கொள்வதாக வேதனைப்படுகிறார்கள்.

வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம், இந்தப் பால் நடிகை தான்.திருமதி பைலட்ஸ்
தொகுப்பு: வம்பு பையன்
(படத்தில் இருப்பவர் நடிகை ஷீனா. அவருக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு இல்லை)