மும்பை பக்கம்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                   அந்த படங்களை ரசிக்கும் நடிகை

‘ராக்ஸ்டார்’ நாயகி நர்கீஸ், ஆங்கில மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்பு வராவிட்டால் சொந்த ஊரான காஷ்மீருக்கே திரும்பிவிடுவாராம்.

‘ரவுடி ராத்தோர்’ படத்தில் பாடலுடன் சேர்ந்து கவிதையும் வருகிறது. இதை பாடியிருப்பவர், அப்படத்தின் நாயகியான சோனாக்ஷி சின்ஹா. இந்தப் பாடல் இந்த ஆண்டின் சிறந்த மெலடியாக பேசப்படும் என்று நம்புகிறார்.

கோவாவில் வாங்கியுள்ள வீட்டில் மினி தியேட்டர் கட்டியுள்ளார் பிபாஷா பாசு. ஓய்வு நேரத்தில் கோவா பறக்கும் அவர், மினி தியேட்டரில் வெளிநாட்டு படங்களை பார்த்து ரசிக்கிறார்.

அமெரிக்காவுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா, இசை ஆல¢பம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது அனைவரும் அறிந்த செய்தி.

 இப்போது இணைப்பாக வேறொரு விஷயமும் கசிகிறது. வேறொன்றுமில்லை, இனி ஆண்டுதோறும் இதுபோல் இசை ஆல்பம் வெளியிடப் போகிறாராம். இதற்காகவே தனி மேனேஜரையும் நியமித்துள்ளார்.

கடுமையான பல் வலியால் அவதிப்பட்ட கேத்ரினா, ஷாருக்கானுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்குக்கு செல்லாமல் கட் அடித்துவிட்டார். தவிர, இனி ஐஸ் கிரீம் சாப்பிடக் கூடாது என முடிவு எடுத்துள்ளாராம்.

‘அக்னிபத்’ படத்தை பார்த்த பின் ஹிரித்திக்கின் மூத்த மகன் ரேஹான், சஞ்சய் தத்தின் ரசிகனாகி விட்டானாம். சமீபத்தில் ஹிரித்திக்குடன் சஞ்சய் வீட்டுக்கு சென்று அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி வந்துள்ளான்.

‘ஏஜென்ட் வினோத்’ படத்தில் காதலர் சைப் அலிகானுடன் நெருக்கமான காட்சிகள் எதிலும் நடிக்கவில்லை என்கிறார் கரீனா. கதைப்படி ஒரு முத்தக் காட்சி வைப்பதாக இயக்குநர் சொன்னபோதும் அது வேண்டாம் என கரீனா மறுத்து விட்டாராம்.

‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் நடித்து வரும் ஸ்ரீதேவி, அப்பட ஷூட்டிங்கிற்கு மகள் ஜான்வியையும் அழைத்து செல்கிறார். அம்மாவின் நடிப்பை நேரில் பார்த்து ரசிக்கிறாராம் வருங்கால ஹீரோயின் ஜான்வி.

‘ஹவுஸ்ஃபுல் 2’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார் மலாய்கா அரோரா. அவர் ஆடினால் படம் ஹிட்டாகும் என்ற செண்டிமென்டுக்காகவே இப்பாடலை படத்தில் வைத்தாராம் இயக்குநர் சாஜித் கான்.
-ஜியா