ஓய்... ஒய்?!



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       எங்க ‘தல’ நடிக்கும் ‘பில்லா-2’ ஸ்பெஷல் புகைப்படங்கள் படத்துக்கான டிரைலராக இருந்தது. வெல்டன்!
- மகேந்திரன், மதுரை.

‘அரவான்’ நாயகி தன்ஷிகாவின் யோகாசனப் படங்களை பார்த்ததும் என் மனசு ரொம்பவும் பலவீனமாகிவிட்டது.
- பன்னீர் செல்வம், பரமக்குடி.

மதுஷாலினியின் ‘துணி’ச்சல் பேட்டி மிரள வைத்தது.
- ராம்குமார், விழுப்புரம்.

இனிவரும் நாட்களில் ‘தோனி’ ராதிகா ஆப்தே தமிழில் நிலையான இடத்தை பிடிப்பார் என்று அவருடைய பேட்டியில் இருந்து நன்றாக தெரிகிறது.
- சுந்தர்ராஜன், ஆத்தூர்.

என்ன ஓய், ‘தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்’ பகுதிக்கு இன்னும் இரண்டு பக்கம் ஒதுக்கினால் குறைந்தா போய்விடுவீர்!?
- முரளிமோகன், கோவை.

மீரான் எழுதிய ‘விளையாட்டா ஜெயிக்கறாங்க’ கட்டுரை அருமை.
- ரவீந்தர், செங்கல்பட்டு.