கத சொல்லப் போறோம்



காணாமல் போன குழந்தையின் கதை

தவமாய் தவமிருந்து  ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள் நரேன்-விஜயலட்சுமி தம்பதி. பிறந்ததும் அந்தக் குழந்தை காணாமல் போகிறது. காணாமல்போன குழந்தையைத் தேடித்தர போலீஸின் உதவியை நாடுகிறார்கள். போலீஸும் மும்முரமாக களத்தில் இறங்கி குழந்தையைத் தேடுகிறது. போலீசாரும் நரேனுடன் சேர்ந்து தேடி வருகின்றனர்.

அந்த சமயத்தில் நரேனின் குழந்தை ஒரு ஆசிரமத்தில் இருக்கிறதாக தகவல் கிடைக்கிறது. அதன் பிறகு நரேன் குடும்பத்துக்கு காணாமல் போன குழந்தை கிடைத்ததா, இல்லையா என்பதே படம்.  

படத்தின் மொத்த பலமே குழந்தைகள்தான். ஷிபானா, ரவீணா, அரவிந்த் ரகுநாத், அரவிந்த், ஷாமு, அர்ஜுன் என அனைத்து சுட்டிகளும் கேமராவுக்கு முன் நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார்கள். அன்புள்ள அப்பாவாக நரேன் மனதைக் கவர்கிறார். ஆசிரியராக வரும் விஸ்வாத்தும் கண் கலங்க வைக்கிறார். 

பவன்  இசையில் பாடல்கள் ஓ.கே. ஜெமின் ஜோம் அயாநாத்தின் கேமரா கதைக்குத் தேவையான விறுவிறுப்பைக் கொடுத்திருக்கிறது. ஆதரவு இல்லாமல் வளரும் குழந்தைகளின் வாழ்க்கையை மிக அற்புதமாக சொன்னதோடு கடைசி காட்சிகளில் கண் கலங்கவும் வைக்கிறார் இயக்குனர் கல்யாண்.