என்னோடு விளையாடு



குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...

தனியார் கம்பெனியில் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்கிறார் பரத். ரேஸ் பிரியரான இவர், குதிரை வாலில் கட்டிய பணத்தை மீட்க குறுக்கு வழியில் பிளான் செய்கிறார். அமைதிப் பிரியரான கதிருக்கு பெண்கள் என்றாலே அலர்ஜி. சூழ்நிலை காரணமாக சஞ்சிதாவோடு பழகுகிறார். சஞ்சிதாவின் வீடு ஏலத்துக்குப் போக, அதை மீட்க கதிர் குறுக்கு வழியில் செல்கிறார். இந்த இளைஞர்கள் இருவரும் குறுக்கு வழியில் சந்தித்து ஆடும் ஆட்டம்தான் ‘என்னோடு விளையாடு’.

பரத், அநியாயத்துக்கு ஸ்மார்ட். உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கிறார். இவருக்கும் சாந்தினிக்கும் கெமிஸ்ட்ரி அமோகம். அப்பாவியாக வந்து அதிரடியில் அசத்துகிறார் கதிர். சஞ்சிதா கிளாமரில் கிண்டி கிழங்கெடுக்கிறார். ராதாரவி, யோக் ஜேபி இருவரும் கச்சிதமான பாத்திரங்களில் கலக்கியிருக்கிறார்கள்.

மோசஸ், சுதர்சன் எம்.குமார் ஆகியோரின் இசையில் பாடல்கள் குட். யுவாவின் கேமரா குதிரை ரேஸ் காட்சிகளில் துள்ளிக் குதிக்கிறது. சூதாட்டத்தையும், சூதாட்டத்தினால் சில குடும்பங்கள் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி.