நாங்களும் இலக்கியவாதி ஆயிட்டோம்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

ப்ளோஅப்கள் வாயிலாக வண்ண வண்ண தேவதைகளின் ஒய்யார அணிவகுப்பு. ‘வண்ணத்திரை’ வரும் நாளெல்லாம் எங்களுக்கு இலவச ஃபேஷன் ஷோ தான்!
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

வண்ணங்கள் ஏராளம், வார்த்தைகளோ தாராளம். தடுமாற்றம் இல்லை; இனி, ஏமாற்றமும் இல்லை. புவியீர்ப்பின் சுழற்சியில் இது வளர்ச்சி என்றால் புகழ்ச்சியும், நெகிழ்ச்சியும்.
- நா.லெனின் தமிழ்முருகன், ஈரோடு-3.

அட்டையில் பூத்த மாராப்பூ போடாத வயாக்ராவைப் பார்த்ததுமே கோடை வெப்பத்திலும் எங்களுக்கு ஐஸ் மழை பொழியுது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

இளையராஜா! இசையுலகுக்கு இறைவன் அளித்த வரம். இசை ரசிகர்கள் செய்த தவம். பவளவிழா காணும் பாட்டுடைத் தலைவனே.... தொடரட்டும் உனது ராஜபாட்டை. உயிருள்ளவரை நேசிப்போம் உனது பாட்டை.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘வாய்தான் கிழியும்’ என்று பெருசாக டைட்டில் போட்டு, எதிர்ப்பக்கத்தில் அட்டகாசமான லுக்கில் ஓர் ஆண்ட்டி படத்தைப் போட்ட சரோஜாதேவிக்கு ஜே!
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

இசைஞானி இளையராஜா குறித்த ‘பிலிமாயணம்’ பகுதிகள் இரண்டுமே அருமை. செய்யும் தொழிலை திறம்பட செய்வதே, நம்முடைய இருப்புக்கு சிறப்பு என்பதே இளையராஜாவின் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

திறந்த புத்தகம் வாசித்தால் பேரின்பம். இன்னும் கொஞ்சம் அட்வான்ஸாக வாசித்தால் சிற்றின்பம், யாசித்தால் பேரின்பம். கலையம்சம் சிலை துவம்சம். நிலைகுலைய வைத்த நாட்டுத் தேன் காட்டுமான். சந்தனச் சிலை. பூமியில் பூத்த புதுவெள்ளி. ஒன்றுமில்லை, உங்கள் ப்ளோஅப் கமெண்டுகளை வாசித்து நாங்களும் இலக்கியவாதி ஆயிட்டோம்.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.