நாடோடியாக ஜீவா!



‘குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஹீரோவாக ஜீவா நடிக்கிறார். நாயகி நடாஷா சிங். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவு எஸ். கே. செல்வகுமார். தயாரிப்பு எஸ்.அம்பேத்குமார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.

‘‘என்னுடைய முந்தைய படங்களிலிருந்து இந்தப் படம் மாறுபட்ட படமாக இருக்கும். ‘ஜோக்கர்’ படத்தில் சமூகத்துக்கான குரல் அழுத்தமாக இருந்திருக்கும். இந்தப் படத்தை என்னுடைய பாணியிலிருந்து வேறுபட்டு கமர்ஷியல் கருத்து படமாக உருவாக்கியுள்ளேன்.
ஜீவாவின் கெட்டப் ஸ்பெஷலா இருக்கும்.

தனக்கு என்று இருப்பிடம் இல்லாமல் இந்தியா முழுக்க சுற்றும் நாடோடியாக வர்றார். ‘மிஸ் இமாச்சல்’ பட்டம் வென்ற நடாஷா சிங்கை முதன் முறையாக தமிழில் அறிமுகப்படுத்துகிறோம். இந்தப் படம் நிச்சயம் ஆடியன்ஸுக்கு நெருக்கமாக இருக்கும்’’ என்கிறார் ராஜுமுருகன்.  

- எஸ்