சரியான அளவு!
சரோஜாதேவி பதில்கள்
*சரோஜாவுக்குப் பிடித்த பழமொழி? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. இறைத்த கிணறு ஊறும்.
* இப்போது ஏன் பெண்கள் மூக்குத்தி அணிவதில்லை? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. அதுக்குப் பதிலாதான் மத்திய சுழியில் வளையம் அணிகிறார்களே, பார்த்ததில்லையா?
* அடைமழைக்குத் தோதான சைட் டிஷ்? - த.சத்தியநாராயணன், அயன்புரம். கோன் ஐஸ்.
* திருமணமான பெண்கள் பாவாடை சட்டை அணியலாமா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. மாப்பிள்ளையின் சவுகரியத்தைப் பொறுத்தது.
* சரியான அளவு எது? - சுவாமி சுப்ரமணியா, பெங்களூரு. அளவும் அளவாக இருந்தாதான் அழகு.
|