Latest Love Gadgets!



மனிதனின் அத்தனை தொழில்நுட்பங்களும் காதலைச் சுற்றியே வருகின்றன. காரணம், காதல் என்பது கடவுளின் தொழில்நுட்பம்! இப்போதெல்லாம் வேலன்டைன்ஸ் டே வந்தால் ரோஸ் கடைகளை விட அதிகம் ரொம்பி வழிவது ரோட்டோர மொபைல் கடைகள்தான். அப்படி கேர்ள் ஃப்ரெண்டையும் லேட்டஸ்ட் ட்ரெண்டையும் திருப்திப்படுத்தும் சில டெக் கேட்ஜெட்டுகளைத் தேடினோம்...

*தங்க நிறத்தில் டாலர் செயின் போலவே இருக்கும் இது, மோசர்பேர் நிறுவனத்தின் 8 ஜி.பி. பென் டிரைவ். விலை ரூ.699/-

*கற்கள் பதித்த இந்தக் கருமை நிறக் கண்ணனும் மாறுவேடமிட்ட பென் டிரைவ்தான். கொள்ளளவு
8 ஜி.பி. விலை, ரூ.500/-

*‘வாவ் Dogy...’ என ஃபீலாகும் பெண்களுக்காகவே கிங்ஸ்டன் பென் டிரைவ். 16 ஜி.பி.யின் விலை ரூ.550/-

*‘‘இது என்ன! ஃபேன்ஸி பேண்ட்தானே?’’ எனப் பார்க்கிறீர்களா? கழற்றிப் பார்த்தால் இது ஒரு டேட்டா கேபிள். எந்த போனையும் கணினியில் அல்லது சார்ஜரில் இணைக்கும் இது எல்லா வண்ணங்களிலும் கிடைக்கிறது. விலை ஆண்ட்ராய்டுக்கு ரூ.150/- ஐபோனுக்கு ரூ.200/-

*அதே செயின் மாடல் பென் டிரைவ்தான். ஆனால் தங்க நிறத்துக்கு ஆயுள் குறைவு என யூத்ஃபுல் ப்ளாக் டிசைனுடன் வருகிறது மைக்ரோவேர் 8 ஜி.பி. பென் டிரைவ். விலை ரூ.900/-

*மினியன் வடிவில் வசீகரிக்கும் இந்த ஸ்பீக்கரை மினியன் என்ற பெயரிலேயே ஒரு நிறுவனம் தயாரிக்கிறது. புதியது என்பதால் விலை, ரூ.500/-

*பையன்களுக்கான பர்ஃபெக்ட் ஹீரோ ஸ்பைடர் மேனை பென் டிரைவ் ஆக்கியிருப்பது மைக்ரோவேர். 8 ஜி.பி. விலை ரூ.499/- 16 ஜி.பி. விலை ரூ.699/-

*ஒரே சார்ஜரில் இணைத்து இரண்டு போன்களை சார்ஜ் செய்யக் கூடிய இரட்டைத்தலை டேட்டா கேபிள் இது. பெரும்பாலும் கையில் பவர் பேங்க் வைத்துத் திரியும் இன்றைய தலைமுறைக்கு இது அத்தியாவசியத் தேவை. விலை ரூ.200/-

*இளசுகளின் காதல் பரிசுகளில் இன்று முதலிடம் ப்ளூ டூத் ஸ்பீக்கர்களுக்குத்தான். இவற்றில் எக்கச்சக்க வெரைட்டி தருகிறார்கள். இன்டர் நிறுவனத்தின் டயர் வடிவ ஸ்பீக்கரான இது, கார்களில் வைத்துக்கொள்ள நல்ல கம்பேனியன். நமது போனை இதில் இணைத்துவிட்டால் போனைத் தொடாமலேயே ஸ்பீக்கரில் பேசலாம். விலை, ரூ.550/-

*இது ஜீப்ரானிக்ஸின் ஜெபட்ரான் ஸ்டிக்கி. பார்க்க காளான் போலவே இருக்கும் இது, சுவர், கண்ணாடி என எதிலும் ஒட்டிக் கொள்ளக் கூடியது. நம் போனுக்கு பின்னாலேயே கூட ஒட்டிக் கொள்ளலாம். மொபைல் மூலம் பார்க்கும் சினிமாக்களை அதிரும் சவுண்டில் தரக்கூடிய ப்ளூ டூத் ஸ்பீக்கர் இது. விலை, ரூ.750/-

*கீ செயின் போலவே இருக்கும் இதுவும் டேட்டா கேபிள்தான். விலை, ஆண்ட்ராய்டுக்கு ரூ.175/- ஐபோனுக்கு ரூ.250/-

*காதலியை கவர் பண்ணும் டார்கெட்டோடு வரும் மொபைல் பேக் கவர்கள்... விலை ரூ.150 - 200/-

*ஜீப்ரானிக்ஸ் டிஸ்கோ. ப்ளூ டூத் ஸ்பீக்கர்களில் இது அடுத்த கட்டம். ஓடிக்கொண்டிருக்கும் பாடலுக்கு ஏற்றபடி வண்ண வண்ண லேசர் ஒளியையும் உமிழ்ந்து பார்ட்டி மூடை இது பற்ற வைக்கும். விலை ரூ.1313/-

*காருக்குள் வைக்க கார் போலவே இருந்தால்தானே வசதி என யோசித்திருக்கிறார்கள் ஜீப்ரானிக்ஸ். கால் ரிசீவிங், மைக் என வழக்கமான வசதிகளோடு பென் டிரைவ், மெமரி கார்டு பொருத்தும் வசதியும் இந்த ஸ்பீக்கரில் உண்டு. கழற்றி மாட்டக் கூடிய நோக்கியா வகை பேட்டரிகளைப் பயன்படுத்துவது இதன் கூடுதல் சிறப்பு. விலை ரூ.875/-

*இதன் பெயரே வேலன்டினோ இயர் போன். இதில் மொத்தம் இரண்டு இயர் போன்கள். இரண்டையும் ஒரே மொபைலில் பொருத்தும் விதமாக ஒரு மும்முனை ஜேக் உடனிருக்கும். அருகருகே உரசியபடி பாட்டுக் கேட்க அருமையான சான்ஸ்! விலை ரூ.499/-

*பார்க்க விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ் போலவே இருந்தாலும், இது அதுக்குக் கொஞ்சம் கீழே. நமது போனை இதில் மாட்டி வைத்துக் கொண்டு படங்களை நாம் மட்டும் தனியாக பார்த்து ரசிக்கலாம். அது பிரமாண்ட தியேட்டர் போலவே தெரியும் அளவுக்கு இதில் லென்ஸ்கள் அமைக்கப்பட்டிருக்கும். தனியே ஓர் உலகம் வேண்டுவோருக்காக! விலை ரூ.1250/-

- நவநீதன்
படங்கள் : ஆர்.சந்திரசேகர்


நன்றி : ஜீப்ரானிக்ஸ், செக்யூர் ஐ.டி ஸ்டோர், ரிச்சி தெரு