அவள்பழி வாங்கும் பேய்கள்... பரிதாப மனிதர்கள்... இமாலயப் பின்னணி என நடுக்கம் தருகிறாள் ‘அவள்’. காதல் மனைவி ஆண்ட்ரியாவோடு புது வீட்டில் வாழ்க்கையைத் தொடங்குகிறார் சித்தார்த். பக்கத்து வீட்டில் வந்து சேர்கிறவர்கள் அறிமுகம் ஆகிறார்கள்.

அங்கே நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்கள்... பேய்கள்... அத்தனை பிரச்னைகளிலிருந்தும் சித்தார்த் அண்ட் கோ மீண்டார்களா...  என்பதே விறுவிறு, துறுதுறு துரத்தல்.சித்தார்த் - ஆண்ட்ரியாவின் ஆரம்ப தாம்பத்யம் தரும் ஏராள, தாராள முத்தங்கள் தாண்டி, ஆவி அரசாங்கம் செய்யத் தொடங்கியவுடன் கதையே மாறிவிடுகிறது. அக்மார்க் பேய்க் கதையில் அதிகம் உழைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மிலிந்த்.

அவருக்கு அனுசரணையாக கை கொடுக்கிறார் சித்தார்த். க்ரிஷின் பின்னணி இசை மிரட்டல். அதுல் குல்கர்னி அருமைத் தேர்வு. இமாலயாவின் அழகு, பங்களாவின் பதட்டம் என அள்ளிக் கொண்டு ப்ரேமிற்குள் அடைகிறது ஸ்ரேயாஸ் கேமரா! ட்ரீட்மென்ட்டில் அசர வைக்கிறாள் ‘அவள்’!

- குங்குமம் விமர்சனக்குழு